மனசு!

மனசு!


" உன்னட்ட எத்தன தடவ சொல்றது. எந்த விசயம் சொன்னாலும் நீ கேக்கிறது இல்ல. என்ன நினச்சிருக்க மனசுல... படிக்கிற நேரத்தில படி. விளையாடுற நேரத்தில விளையாடு. படிக்கமாட்டன்னு சொன்னா...?"

"சும்மாயிருங்கப்பா... எப்பப் பாத்தாலும் என்ன மட்டும்தான் குறையா பேசியிட்டே இருக்கணும் உங்களுக்கு... என்ன உங்களுக்கு பிடிக்கலியா..." அப்பாவிடம் கோபித்துக் கொண்டான் சிராஜ்.

"என்னங்க நீங்க... அவன, அவனுக்கு இஸ்டத்துக்கு விடுங்க. அவன் படிப்பான். உங்களுக்கு வேலைக்கு நேரமாச்சு. கிளம்புங்க நீங்க..."

மனைவியின் அதட்டல் பேச்சு அவனுக்கு கோபமாய் வந்தது.

"செல்வி...  நீ அதிகம் செல்லம் கொடுக்கிற. நான் ஏதாவது சொன்னா நீ தான் அவனுட்ட பேசணும். அப்பா உன் நல்லதுக்குதானே சொல்லுறாரு. அத விட்டுட்டு அவனுக்கு சப்போட்டா பேசினா... அவனுக்கு தைரியம் தான் வரும். என்மேல கோவம் தான் வரும்..." கடுப்புடன் சொன்ன சேகர், பக்கத்து அறையை எட்டிப்பார்த்தான். சிராஜ் படித்துக் கொண்டிருந்தான்.

" செல்வி இங்கே வா... நான் போனபிறகு அவனுட்ட போய் சத்தம் போடாதே... அடிக்காதே. அவன் ஒழுங்கா படிப்பான். அடிக்கடி சாப்பிட அவனுக்கு ஏதாவது கொடு. லைட்டா காபி போட்டுக் கொடு. சாயங்காலம் நான் வரும்போது அவனுக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வாரேன்..." சொல்லிக் கொண்டு கிளம்பினான் சேகர்.

இவரா இப்படி பேசிட்டுப் போறது. இவருக்க மனச என்னாலயே புரிஞ்சிக்க முடியல... ஆச்சரியப்பட்டாள் செல்வி.


1 Comments

  1. மிக்க அன்பில்...

    எனது சிறுகதையான 'மனசு' வேட்டை இதழில் வெளியிட்டு சிறப்பித்துள்ளீர்கள்.

    மனம் நிறைந்த பாராட்டும், வாழ்த்துகளும்...

    ReplyDelete
Previous Post Next Post