Ticker

6/recent/ticker-posts

பொறுமை!


மண்ணில் ஊன்றிய 
இலைகள் துளிர்த்து
மொட்டு அரும்பி
இதழ்கள் விரியும் காலம் வரை
காத்திருக்கும்
சிறுமி
ரோஜா கம்பில்

மெல்ல முளைத்து
பயிராகி விளைந்து
அறுவடையாகும் காலம் வரை
காத்திருக்கும்
விவசாயி
தூவிய விதைகள்

இலைகளின் மறைவில்
மரத்தில் தொங்கும் காய்
கனியும் காலம் வரை
காத்திருக்கும்
பறவை

அடிவயிற்றை தடவித் தடவி
ஆகாச கனவினில் மிதந்து
முதல் அழுகை ஒலிக்கும்
அதிசய நிமிடம் வரை
காத்திருக்கும்
தாய்

பூவிலிருந்து உருவாகி
உருவான நாள் முதலாய்
பூ பறிப்பதைப் போல
இலகுவானதல்ல
சிற்பம் செதுக்கும்
நுட்பமானது
பொறுமை...



Post a Comment

0 Comments