குறள் 403கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
மாப்ள... படிச்சவங்க முன்னால, ஒண்ணும் பேசாம அமைதியா இருந்தாலே போதும். அப்படி இருந்துட்டா, படிக்காதவங்க கூட நல்லவங்க தான் மாப்ள..
குறள் 404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
படிக்காதவனோட கருத்துக்கள் நல்லாவே இருந்தாலும், இந்த படிச்சவொ இருக்காவொள, மாப்ள... அவொ எந்த காலத்திலியும் அந்த படிக்காதவனை படிச்சவனா ஏத்துக் கொள்ளவே மாட்டாவொ.
குறள் 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
மாப்ள.. ஒண்ணுமே படிக்காதவனுவொ எல்லாம் நம்ம கிட்ட பேசும் போது பெரிய மேதாவி மாதிரி வேசம் போடுவானுவொ.
நல்ல படிச்ச அறிஞர்கள் கிட்ட பேசுனானுவொன்னா அவனுவொளோட சாயம் நல்ல வெளுத்திரும் மாப்ள.
குறள் 406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
மாப்ள... படிக்காதவனுவொள்லாம் களர் நிலம் மாதிரித் தான். அவனுவொளால யாருக்கும் சல்லிக் காசு நன்மை கிடையாது. அவனுவொ வேணா உயிரோட அலைஞ்சுகிட்டு இருப்பானுவொ. ஆனா வெறும் நடை பிணங்கள் போலத் தான் மாப்ள.
குறள் 407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
மாப்ள.. வளத்தியும் சதையுமா, ஒருத்தன் நல்ல அழகா இருந்துட்டா மட்டும் போதாது. எதையும் ஆழ்ந்து சிந்திச்சு செயல் படுத அனுபவ அறிவு அவனுக்கு இல்லைன்னு வச்சுக்கோயேன். அவன் அழகான ஒரு மண் பொம்மைக்குத் தான் சமம் மாப்ள.
குறள் 409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
மாப்ள .. வசதியான ஒரு பெரிய குடும்பத்துல பொறந்த ஒருத்தன் சரியாப் படிய்க்காதவன். இன்னொருத்தன் சாதாரண குடும்பத்துல பொறந்து நல்ல படிச்சவன். இந்த ரெண்டுவேர்ல, பெரிய குடும்பத்து படிக்காதவனுக்கு எந்த ஒரு பெருமையும் கெடையாது மாப்ள.
(தொடரும்)


0 Comments