
நான் நிலவைப் பார்க்க
நிமிர்ந்த பொழுதெல்லாம்
காலைத் தட்டி கடிவாளம்
நீட்டுகிறது நாளை.....
நாற்றங்கள் மேல் கொஞ்சம்
நாளும் படர்ந்த நான் கொஞ்சம்
என்னவள் பாதம் தொட்ட
வரப்பை தொடர்ந்து
வாய்க்காலில் பாய்கிறது
வாழ்க்கையோடை.....!
கலங்கரைகளை கட்டியிழுத்து
கண்ணில் நீட்டிய
கரும் ஆணியில் கொக்கியிட்டு
காத்திருக்க தொடங்குகிறது
காத்திருப்பு உண்மைகள்....!
கலங்காத நாளிலும்
காதலில் சிறு ஊடலும்
ஒருநாளும் இழைப்பாற
தயங்குவதில்லை என்
உளமாற உணவூட்டும்
உரங்களை கொட்டி வளர்த்திடும்
நாளைய கனவுகள்.....!


0 Comments