
ஏழை விவசாயி ஏர்ப் பிடித்தான்
மழைநீரால் நாற்று நட்டு மகிழ்ந்தான்
பயிர் வளர்த்து பசுமை குன்றாது
உயிர் காத்து பெருமை கொள்கிறான்.
மண்ணைக் கொத்தி பண்படுத்தி அவன்
விண்ணை தொடும் புகழும் படைக்கின்றான்..
மாடு கொண்டு உழும் விவசாயி
ஏடுகளில் பொன்னெழுத்துக்களால்
பொறிக்கப்பட வேண்டும்.
காட்டை கழனியாக்கி களைகளை நீக்கி
வீட்டில் சோறு பொங்க வழிசெய்வான்


0 Comments