Ticker

6/recent/ticker-posts

என்றும் உனக்காக நான்...!


"... மஞ்சுளா...மஞ்சுளா..."எங்க போனா இவ..?ஆளயே காணல்ல...எங்கயாவது ஊர் வம்பு அளந்திட்டு  இருப்பா....நேரத்துக்கு எந்த வேலயும் முடிக்கிறது இல்ல..

."..மஞ்சுளா...மஞ்சுளா.."

அத்தையின் குரல் கேட்ட மஞ்சுளா..
"இதோ!!.. வந்துட்டேன் அத்த...என்ன கூப்பிடீங்களா..அத்த..?" என மனம் படபடக்க தயக்கத்துடன் கேட்டாள் மஞ்சுளா.

"எங்க போய் தொலஞ்ச... நேரத்துக்கு ஒரு வேலய செய்ய மாட்டீயா நீ..அப்படி என்ன வேல உனக்கு...புள்ளயா குட்டியா...அதுங்க பின்னாடி ஓட..சும்மா தானே இருக்க...சொன்ன வேலய செய்ய முடியாதா... உனக்கு..."

என கடுகடுவென பொறிந்து தள்ளினாள் அத்தை.

"ஏன் அத்த எத செய்யாம போனேன்..சமயல் வேலய முடிச்சிட்டு...கொடியில காய போட்ட துணிய எடுக்க மாடிக்கு 
போனேன் அத்த ..அது தான் நீங்க கூப்பிட்டது கேக்கல்ல. மன்னிச்சிடுங்க..அத்த.".என கண்கலங்க கூறினாள் மஞ்சுளா.

"என் சின்ன பொண்ணு மகளுக்கு வெந்நீர் வைக்க சொன்னேனே எங்க வைச்சியா நீ..."எனமீண்டும்  கடுகடுத்தார் அத்த.

"ஐயோ!!...மறந்துட்டேன் அத்தை..இதோ அஞ்சே நிமிசம் வெச்சு தந்திடுறேன் அத்த..."அத்தையின் சுடு வார்த்தைகள் அவள் மனதை காயபடுத்த..கண்களில் வழிந்த கண்ணீரை சேலை தலைப்பால் துடைத்தவளாய்....அடுப்படிக்குள் சென்றாள் மஞ்சுளா.. 

இது ஒண்ணும் புதுசுல்ல மஞ்சுளாவிற்க்கு தினம் தினம் அத்தையின் வார்த்தைகள் வேல் போல் அவள் மனதில் பாய்ச்சும்..அணல்  பட்ட புழுவாய் துடித்தாள் மஞ்சுளா...ஏன் கடவுளே என்ன இப்படி சோதிக்கிற...திருமணமாகி பத்து வருடம் கடந்தும் ஏன்  குழந்தை பாக்கியத்த கடவுள் எனக்கு கொடுக்கல்ல.

என்ன பாவம் செஞ்சேன் நான்...
இதனால தானே அத்தையும் வீட்டில் உள்ளவங்களும் என்ன வெறுக்குறாங்க...ஏன் கடவுளே இந்த சோதன... என மனதுக்குள் வெதும்பினாள் மஞ்சுளா.

ஆனாலும் அவள் கண்களில் வழிந்த கண்ணீரை தடை போட முடியவில்லை.

ரமேஷின்   அன்பு மாத்திரமே அவளை இன்னும் வாழச்சொல்கிறது.மஞ்சுளாவின் காதல் கணவர் அவள் மீது உயிரையே வைத்திருந்தான்.

ஆபிஸ் வேலையை முடித்த ரமேஷ் மிகவும் கலைப்புடன் வீட்டை வந்தடைந்தான்.

"மஞ்சு...மஞ்சு..".என செல்லமாய் மனைவியை அழைத்தான் ரமேஷ்.

"இதோ ...வந்துட்டேங்க.."என மஞ்சுளாவும்பதில் கொடுத்தாள்.

அவள் முகம் வாடி இருப்பதை கண்டரமேஷ்...இன்னக்கும்ஏதோ ஒன்னு நடந்திருக்கு வீட்டுல...அது தான் மஞ்சுவின் முகம் வாடி போயிருக்கு.

"ஏம்மா...ஒரு மதிரியா இருக்க ..என்னாச்சு...இன்னைக்கும் ஏதாவது பிரச்சினயா.. .?"என வினவினான்.

"அப்படி ஒன்னுமில்லைங்க...லேசா தலவலிக்குது அவ்வளவு தான்".

"அப்படியா ...நீ ..போய் தூங்கு..நான் பாத்துக்கிறேன்...மஞ்சு.."என்றான்.

"இல்ல பரவாயில்ல..அவ்வளவு கஷ்ட்டமா இல்ல..முகத்த கழுவிட்டு சாப்பிட வாங்க.."என்றாள்.

ஆனாலும் ஏதோ ஒன்ன மறைக்கிறாள்..என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.

"என்னவாம் ...உங்க மகராணிக்கு...வந்ததும் வராததுமா எத வத்தீ வைச்சுறாங்க...அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்..
எங்கோ போற அநாதய கட்டிட்டு வராம...நான் பார்த்த பொண்ண கட்டிக்க என்டு...எங்க கேட்டா தானே...ஒரு அநாதய காதலிச்ச பாவத்துக்கு அவளயே கட்டிகிட்டு குப்ப கொட்ட வேண்டியது தான்...சரி பரவாயில்ல என்டு நெனச்சா...ஒரு வாரிசு பெத்துக் கொடுக்க துப்பில்ல..ஒரு புழு பூச்சு தங்கல்ல வயித்துல...இப்ப கூட ஒண்ணும் கெட்டு போகல்ல..இவள தலமுழுகிட்டு...என் அண்ணன் பொண்ண கட்டிக்க.."என்றாள்  அம்மா சிவகாமி.

"என்னம்மா ...சொல்றீங்க...எப்பவும் இதே வம்பா போச்சு...அவ எதுவும் சொல்லல்ல...நீங்களா  ஒன்ன கற்பன பண்ணி பேசாதீங்க..அம்மா...எப்பவும்...அவ மனச நோகடிக்கிறதே உங்க வேலயா போச்சு...ஆபிசுல இருந்து வீட்டுக்கு...வந்தாகொஞ்சம் கூடநிம்மதி இல்ல....சே.".. என கூறியவனாய் எறிச்சலுடன் உள்ளே எழுந்து சென்றான் ரமேஷ்.

அப்படி என்னடா தப்பா சொல்லிட்டேன்...ஆமா உங்க மகராணிய பற்றி பேசிட கூடாதே...தொரக்கி பொறுக்காதே...இல்லாததயா சொன்னேன்...உண்மைய தானே சொன்னேன்....ஆமப்பா..என்னால தான் இவர் நிம்மதி போச்சி.."என பொலம்பினாள் சிவகாமி.

சாப்பாடு தட்டை ஏந்தியவளாய்...மஞ்சு அறைக்குள் சென்றாள்.

"என்னங்க இது சாப்பிடாம வந்துட்டீங்க...எப்பவும் நடக்குறது தானே...விடுங்க...சாப்பிடுங்க  பிளீஸ்..."என்று கெஞ்சினாள்.

அவன் கண்கள் கலங்கி இருந்தன.
"இல்ல மஞ்சு...அம்மா இப்படி பேசலாமா...வயசுல பெரியவங்க...இவங்களே இப்படி பேசினா எப்படி..மஞ்சு.."

"சரி விடுங்க சாப்பிடுங்க பிளீஸ் ரமேஷ்...கொண்டு போ எனக்கு பசிக்கல்ல.."
அன்று இரவு இருவரும் பட்டினியுடன் உறங்கினர்.

ஏதோ ஒரு முடிவு எடுத்தவனாய் காலை  ஆபிசுக்கு புறப்பட்டு சென்றான் ரமேஷ்.

மாலையில் வீட்டுக்கு வந்த ரமேஷ்."அம்மா...அம்மா...".என அழைத்தான்.

"என்னப்பா... "என்று கேட்டவளாய் சிவகாமி வந்தாள்.

"இங்க..வாங்கம்மா..நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்.".என்றான்.

வீட்டில் உள்ள அனைவரும் என்ன என்று கேட்பது போல...அவன் முகத்தை பார்த்தனர்.

"இல்ல.. அம்மா..நானும் மஞ்சுவும் தனிக்குடித்தனம் போக போறோம்..."என்றான்.

"என்ன ..என்ன ...சொல்ற ..ரமேஷ்...அப்படி என்ன நடந்து போச்சு இங்க...ஆமா..உங்க மகராணி நல்லா ஏத்தி விட்டு இருக்காங்க... இருக்குற ஒரு மகனையும் பிரிச்சிட்டு போக நல்லா திட்டம் போட்டிருக்கா...அவ பேச்ச கேட்டு...நீயும் சோளகாட்டு பொம்மைய போல தலய தலய ஆட்டுங்க.." என மஞ்சுளாவை பார்த்தவாறு சிவகாமி கூறினாள்.

"பார்த்தீங்களா..அம்மா...இப்பவும் அவளதான் வம்புக்கு இழுக்குறீங்க...அவள குற சொல்லாதீங்க...நான்  எடுத்த இந்த முடிவுல...மஞ்சுக்கு எந்த பங்குமில்ல...
எனக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும்..இதே வீட்டுல ஒன்னா தொடர்ந்து இருந்தா..மனக்கசப்பினால எங்க பிரிஞ்சிடுவோமோ...என்று பயமா இருக்கு அம்மா ...அது தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்."

"ஆமா வீட்ட விட்டுட்டு போய்ட்டா...எல்லா பிரச்சினையும்...முடிஞ்சுடுமா என்ன...இல்ல...கொழந்த குட்டி தான் பிறக்க போகுதா...."என்றாள் மூத்த தங்கை சீதா.

"நீ பேசாத... எல்லாரும் ஒன்னா இருக்கிறதால தான் எல்லா பிரச்சினையும்..என் முடிவுல எந்த மாற்றமும்..இல்ல ஆபிஸ் பக்கத்திலேயே வீடும் பாத்துட்டேன்.மஞ்சு நாம நாளக்கே போறோம்" என்றான்.

"என்னங்க நீங்க இப்படி ஒரு முடிவ திடீர் என்று எடுத்தீங்க...நான் கொஞ்சம் கூட விருப்பமில்ல...அநாதயா இருக்கிற நான் கூட்டு குடும்பமா இருக்குற உங்க வீட்டுல எல்லா உறவுகளோடும் வாழ ஆச பட்டேன்...இப்ப என்ன திரும்பவும் அநாதயா தனியாலா வாழ வைக்க போறீங்க சொல்றீங்க...என்னங்க இது...எப்ப சரி ஒரு நாள் என்ன புரிஞ்சுக்குவாங்க என்ற நம்பிக்கைல வாழ்ந்துட்டு இருக்கேன். அத்த எது வேணிலும் சொல்லிட்டு போகட்டும்...அவங்க என் அம்மா மாதிரி.."என கூறியவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

"பாத்தீங்ளா அம்மா....அண்ணியோட நடிப்ப....சொல்றதயும் சொல்லி கொடுத்துட்டு இப்ப எப்படி நடிக்கிறா பாருங்க..."என்றாள் ரமேஷின் சிறிய தங்கை கீதா.

"அது தானே..."என்று  அம்மாவும் ஒத்துழைத்தாள்.

"பாத்தியா ..மஞ்சு ..இவங்க பாசத்துக்காகவா நீ ஏங்குற...விடுமா ..உனக்கு எப்பவும் நானிருக்கேன்.எவ்வளவு பேசியும் "அவன் மனசு மாறவில்லை .

மறு நாள் காலை இருவரும் தனிக்குடித்தனம் சென்றனர்.

மாதங்கள் சில உருண்டோடின.

யாரும் அவர்கள் இருவரை பற்றியும் தேடவில்லை.

ஆனாலும் தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை சரி வர செய்தான்.

அன்று மாலை வேலை ஞாயிற்று கிழமை இருவரும் கடற்கரைக்கு சென்றனர்.

மணலில் அமர்ந்த மஞ்சு...கரை வந்து மோதும் அலையை வெறித்து பார்த்த வண்ணம் இருந்தாள்.

"என்ன மஞ்சு ரொம்ப நேரமா கடலையே ...பார்த்துட்டு இருக்க...'என்றான்.

"இல்லைங்க ...நாங்களும் வந்து  மூனு மாசமாச்சி...யாரும் என்கிட்ட பேசவவும் இல்ல...விசாரிக்கவும் இல்ல...யேங்க குழந்த இல்லாதது இவ்வளவு பெரிய குற்றமா...இல்ல எனக்கு வந்த சாபமா...யாருக்கும் என் மேல பாசம் வராதா...நான் அநாதயா வாழ்ந்து அநாதயா சாகனுமா...அவங்க பொண்ணு இப்படி இருந்தா ஒதுக்கி வைப்பாங்களா...இல்ல தானே..."என கூறியவள் அவன் தோலில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

"அப்படி இல்லமா...யாருக்கும் உன்ன புடிக்காம...இல்ல...உன் மேல உயிரே வைச்சிக்கிறேன்...நீ எனக்கு மனைவியா வந்தது..கடவுள் தந்த வரம்..நான் செய்த புண்ணியம்...நீ தான் என் உலகம் ...ஒரு நாள் உன்னையும் எலலோரும் புரிஞ்சுக்குவாங்க மஞ்சு...ஆயிரம் தடை வந்தாலும...நான் என்றும் உனக்காக இருப்பேன்..".

தோலில் சாய்ந்த மஞ்சுவை தலையை கோதி அவன் மார்போடு அனைத்துக் கொண்டான்.


Post a Comment

0 Comments