Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கு மோடி தேவை மோடிக்கு ராஜபக்ஷாக்கள் தேவை


தற்போதய அரசுடன் உலகின் பல நாடுகள் கோபமடைந்துள்ளமைக்கான காரணம் இனவாத, இனவெறிச் செயற்பாடுகளே ஆகும்.

இனவாதத்தின் மூலம் அரசியலில் வெற்றியடையலாம் என்று பகற்கனவு கண்ட ராஜபக்ஷாக்களுக்கு இன்று பல உலகநாடுகள்   தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றன.

இனவாதத்தை எப்போதும் தமது பிழைப்பாக பயன்படுத்தும் இந்தியாவின் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளை பின்பற்றும் தற்போதைய அரசாங்கம்  நாட்டுக்கு பெரும் பாதகமாவே இருந்து வருகின்றனர்.

இலங்கைக்கு மோடி தேவை மோடிக்கு இலங்கையில் ராஜபக்ஷாக்கள் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.


பா.ஜ.கவின் பங்காளிக் கட்சியும்,பயங்கரவாத இயக்கமுமாகிய    RSS இயக்கத்தை இலங்கைக்குள் விரிவு படுத்தும் நோக்கத்தில் இந்தியா செயல்படுகின்றது.                    

ராஜபக்ஷாக்கள் ஆட்சியில் இருந்தால் மோடி அரசுக்கு இலங்கைக்குள் காலூண்டுவது மிகவும் இலகுவான காரியமாகிவிடும்.

இப்படி பல விடயங்களில் ராஜபக்ஷாக்கள் மோடிக்கு சாதகமாய் இருப்பதால்  இவர்களை  காப்பாற்றுவது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான ஒரு விடயமாகிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் திருக்கோணாமலை துறைமுகம் இந்தியாவுக்கு மிக மிக முக்கியம் என்ற அடிப்படையிலும் இந்தியாவின் உதவி ராஜபக்ஷாக்களுக்கு தொடர்ந்தும் கிடைக்கும்.ராஜபக்ஷாக்கள் பணத்திற்காக நாட்டில் எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்று இந்தியாவிற்கு நன்றாகத் தெரியும்.ஆகவே ராஜபக்ஷாக்கள் உதவி கோரும் போதெல்லாம் உடனடியாக செய்வதற்கு இந்தியா தயார் நிலையில் உள்ளது.                                             
ராஜ பக்ஷாக்கள் பல உலக நாடுகளிடம் உதவி கோரினாலும் எந்த ஒரு நாடும் உறுதியான ஒரு முடிவை அறிவிக்கவில்லை.
அதிலும் முக்கியமாக அரபு நாடுகள் ராஜபக்ஷாக்கள் ஆட்சியில் இருக்கும்வரை உதவ முடியாது என்று உறுதியாக அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் நாளுக்குநாள் மக்கள் போராட்டங்கள் அதிகரித்துகொண்டிருக்கின்றன.ராஜபக்ஷாக்களின் பதவி விலகல் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

எனினும் ராஜபக்ஷாக்கள் விடுவதாய் இல்லை மாட்டின் கொம்பை பிடித்த நிலையில் இருக்கின்றார்கள் .கொம்பை விட்டால் மாடு குத்திவிடும் என்ற பயம்.

இவர்களின் திருட்டுக்கள் ஏற்கனவேஅம்பலமாகிவிட்ட நிலையில் மக்கள் மிகவும் கொதிநிலையில் போராடிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் பதவிகளை துறந்தால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாக இவர்கள் பதவிகளை துறக்க தயாராக இல்லாமலும் இருக்கலாம்.  

எது எப்படியோ இன்று பல்வேறு நெருக்கடியில் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறது இலங்கை. எரிபொருள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

எந்த நாட்டில் எதைக் கேட்பது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக நிலவி வந்த நெருக்கடி நிலைமை நாளடைவில் மிக மோசமானதாக உருவாகி மீள முடியாத நிலையை எட்டிவிட்டது என உலக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலியாக நாளுக்கு நாள் மின்வெட்டு நேரம் உயர்வடைவதுடன், பொருட்களின் விலையும் வானளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் எரிவாயுவும், எரிபொருட்களும் இன்றி மக்கள் நடுத் தெருவிற்கு வந்து நின்றும், கிடைக்காமல் கடும் விரக்தியில் இருக்கிறார்கள்.


நாட்கணக்கில் மக்கள் வரிசைகளில் நின்றும் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு கையிருப்பு அற்ற தன்மையும் கறுப்புசந்தையின் ஆதிக்கமும் செல்வாக்கு செலுத்து வருகின்றன. 

எவ்வாறாயினும், எரிபொருளுக்கான தட்டுப்பாடு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அரசாங்கம் எரிபொருள் விநியோகத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் கூட எரிபொருளுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது அரசின் இயலாமையை காட்டுகின்றது.

பல்வேறு நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அரச இயந்திரம் முனைப்புக்காட்டி வந்தாலும்,பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வு இல்லை என்கின்றன எதிர்கட்சிகள்.

இதுவொருபுறமிருக்க, இன்றைய எரிபொருள் இருப்பானது, 9000 மெற்றிக் தொன் டீசல் , 6000 மெற்றிக் தொன் பெட்ரோலுமே கையிருப்பில் உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடிகளையும் அதனால் உண்டாகப்போகும் விளைவுகளையும் முற்கூட்டியே சரி செய்வதற்காய் சர்வதேசங்கள் நோக்கி இலங்கையின் முக்கியஸ்தர்கள் பயனப்படுகின்றார்கள் .

கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு அறிவிறுத்தியதுடன், காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்காலத்தில் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் அக்கறை காட்டவில்லை என்பதுடன், இருவேறு நிலைப்பாட்டிலும் இருந்தது.

ஆனாலும், நெருக்கடி நிலை நீடிக்க, அரசியல் நெருக்கடிகளும் ஏற்பட்டது, அதனையடுத்து இலங்கையின் பொருளாதாரம் படுகுழிக்குள் வீழ்ந்ததையடுத்து மேலும் மக்களின் அன்றாட தேவைகளுக்கும், அத்தியவசிய பொருட்களின் கொள்வனவிற்கும் பெரும் சிக்கல் நிலை உருவாக, மக்கள் கிளர்ந்து எழுந்தனர்.

இதற்கிடையில், அன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தை எச்சரித்த ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எனினும், அவர் ஆட்சியேற்றும் கூட வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மட்டுமல்ல உடனடித் தேவைகளை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி, அரசின் பிரச்சினைகளை அறிவிக்கும் அறிவிப்பாளராக மாத்திரமே ரணில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும், பொருளாதாரத்தை தீர்த்து வைக்கும் சிறந்த திட்டம் அவரிடமும் இல்லை என்கிறது எதிர்கட்சி.

மக்கள் தற்போது வரிசை யுகத்திற்கு முடிவு கட்டுமாறே வலியுறுத்தி கேட்கிறார்கள். ஆனால், அவற்றை சீர் செய்ய முடியாமல் அரசாங்கம் திணறுகின்றது என்பதை காண முடிகிறது.

இந்த நிலையிலேயே தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் சிக்கல்களை தீர்க்க அமைச்சர்கள் வெளிநாடு பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர கடந்த  திங்கட்கிழமை கட்டார் சென்றும் சாதகமான ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கோட்டபயாவின் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு உதவ முடியாது என்று திட்டவட்டமாக கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன,

அதற்குக் காரணம் இருக்கின்றது . 

உலக சுகாதார அமைப்பின் விதிமுறை களுக்கமைய,  கொரோனா நோயால் உயிரிழந்த இஸ்லாமிய மக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு உலகின் 57 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கோரிக்கை விடுத்தது.

அந்த கோரிக்கையை பொருட்படுத்தாமல்  கலந்துரையாடலுக்கு இடமளிக்காமல் தகனம் செய்தமை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பிற்கு இவையே காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரபு நாடுகள் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்கின்றதாகவும் தவறான கருத்துக்களை கூறி அரபுநாடுகளை பகைத்துகொண்டதும் ஒரு காரணமாக கருதப் படுகின்றது.  

கத்தார் விஜயத்தின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடப் படதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு உதவுவதில் ரஷ்யாவிடமிருந்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் மிகப்பெரும் கிளர்ச்சி ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக நிபுணர்கள்தெரிவிக்கின்றார்கள் 
அநேகமான நாடுகள் தற்போதைய அரசாங்கதிற்கு உதவ தயங்குகின்றார்கள்.

இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளுடனுமான நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளதை இன்று தெளிவாகக் காண முடிகின்றது,

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் கால் பதிப்பதை இந்தியா விரும்பவில்லை.அந்த ஒரே ஒரு காரணம் இந்தியா இலங்கைக்கு உதவக் கூடிய ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.


அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் RRSயை  ,இலங்கையில் உருவாக்கும் நோக்கமும் இந்தியாவின் உதவியின் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடியின் நோக்கம் நிறைவேற இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சியை சாதகமாக பயன்படுத்துகின்றார்கள்என்றும் தெரிவிக்கப் படுகின்றது.

இன்னும் எவ்வளவு நாட்கள்தான்  மக்கள் பொறுப்பார்கள்?

கல்ஹின்னை மாஸ்டர்


Post a Comment

0 Comments