Ticker

6/recent/ticker-posts

நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளை

ரஷ்யாவில் தாம் பணியாற்றிய வங்கியில் இருந்து 7 மில்லியன் பவுண்டுகள் தொகையுடன் வெளிநாட்டுக்கு தப்பிய பெண் ஒருவர் தற்போது விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார்.

சைபீரியன் வங்கி ஒன்றில் பணியாற்றிய Inessa Brandenburg என்பவர் கடந்த 2018 ஜனவரி மாதம் கொள்ளையிட்ட 7 மில்லியன் பவுண்டுகள் தொகையுடன் தனியார் விமானத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு தப்பிச் சென்றார்.

அங்கேயே அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இதனிடையே வங்கி பெட்டகத்தில் இருந்து 561 மில்லியன் ரூபிள் தொகை மாயமாகியுள்ளது ஊழியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெட்டகத்தில் பணத்திற்கு பதிலாக எழுது பொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து விசாரணை முடுக்கிவிடப்பட, தனியார் விமானத்தில் Inessa Brandenburg மாஸ்கோ பயணப்பட்டதும் அங்கிருந்து ஜேர்மனிக்கு தப்பியதும் தெரியவந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் ஸ்பெயின் நாட்டில் குடியிருப்பது கண்டுபிடிக்கப்பட, தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விசாரணையை எதிர்கொள்ள அவர் ரஷ்யா திரும்ப உள்ளார்.
 


Post a Comment

0 Comments