Ticker

6/recent/ticker-posts

வேப்பயிலை வரட்டி (முடக்கத்தான் கீரை வடை )


தேவையானவை
100 கி.ம். புதிய துளிர் வேப்பயிலை.
200-கி.ம் கறிவேப்பிலை.
50.கி.ம்.காரமான பட்டமிளகாய்
2- தேக்கரண்டி  பொடி செய்த சவ்வாரிசி
50.கி.ம் உளுந்து.
2-.மேசைக்கரண்டி  சிறுசீரகம்.
1- தேக்கரண்டி  அஜனாமோட்டோ.
தேவைக்கு ஏற்ப உப்பு
2- எலுமிச்சம் அளவு பழப்புளி.

செய்முறை
கறிவேப்பிலையின் நடு தண்டை எடுத்து விட்டு வேப்பம் துளிரோடு இடித்துக் கொள்ளவும்
பட்டமிளகாய் -சீரகம் -உளுந்து -சவ்வாரிசி
இவைகளை வறுத்து  பொடி செய்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு மஞ்சள் புளிகரசல் இடித்த இலை அஜனா அனைத்தையும் சேர்த்து நீர் விடாமல் பிசைந்து  1 மணி நேரம் ஊற விட்டு பின்னர் சிறு சிறு உருண்டையாக எடுத்து  மெலிசாக தட்டி வெயிலில் 3 நாள் தொடர்ந்து காய வைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு வருடத்துக்கு இருக்கும் சாப்பாட்டுக்கு தேவையான அளவு எடுத்து பொரித்து சாப்பிடவும் காரம் புளி கசப்பு மூன்றும் ஒன்றாய் சேர சுவையாக இருக்கும்.

2.

தேவையானவை
200-கி. ம் தட்டைப்பயறு (கௌப்பி)
100-கி. ம். முடக்கத்தான் கீரை இலை.
ஏனைப பொருட்கள்  உங்கள் தேவைக்கு
ஏற்ப சேர்த்துக்கொள்ளுங்கள். (வெங்காயம். மிளகாய். கறிவேப்பிலை. உப்பு. சீரகம்)
பொரிக்கத் தேவையான எண்ணெய்.

செய்முறை
பொதுவாக வடை செய்வது போல் அனைத்தையும் தயார் செய்து கொள்ளுங்கள் 
கீரையை மட்டும் பொடியாக நறுக்கி  ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு எலுமிச்சம் பழ சாருடன் உப்பு சேர்த்து கொஞ்சம் பிசைந்து விட்டு 15 நிமிடம் ஊற விட்டு பின்  பிழிஞ்சு எடுத்து விட்டு வடைக்குத் தாயார் செய்த தட்டைப்பயறுடன் (கௌப்பி)  சேர்த்து
வடை போல் தட்டி சுட்டு எடுக்கவும்.



Post a Comment

0 Comments