Ticker

6/recent/ticker-posts

"தேர்வா? திருமணமா? இரண்டும்தான்!" - மணக்கோலத்தில் தேர்வெழுதிய மாணவி...


சில பெண்களுக்குத் திருமணம் செய்வது நீண்டநாள் கனவாக இருக்கலாம்...

சில பெண்கள் படித்துமுடித்த பிறகு பிடித்த வேலை செய்வதைக் கனவாக கொண்டிருக்கலாம்...

இரண்டு கனவுகளும் ஒரே பெண்ணுக்குச் சொந்தம் என்றால்?

இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீ லட்சுமி அனில் (Shree Lekshmi Anil) என்ற பெண்ணுக்கு அப்படித்தான்.

உடல் இயக்கச் சிகிச்சைப் பாடத்தைப் பயிலும் அவருக்குத் திருமணமும் தேர்வும் ஒரே நாளில்...

செய்முறைத் தேர்வுக்கு மணக்கோலத்தில் சென்றார் லட்சுமி.

சேலை, ஆபரணங்களின் மேல் ஆய்வுக்கூடத்தில் அணியும் மேலாடையை அணிந்துகொண்டு கழுத்தில் இதயத்துடிப்புக் குழல் சாதனத்துடன் அவர் தேர்வெழுதச் சென்றது காணொளியாக Instagram பக்கத்தில் பகிரப்பட்டது.

அவர் தேர்வுக்குப் போகும் வழியில் காரில் படிப்பது வேறொரு காணொளியில் பதியப்பட்டது.

கல்லூரிக்குச் சென்றுசேர்ந்ததும் அவரின் நண்பர் ஒருவர் சேலையின் மடிப்புகளை ஒழுங்குபடுத்திக் கழுத்தில் இதயத்துடிப்புக் குழல் சாதனத்தை மாட்டித் தந்தார்.

காணொளியின் முடிவில் மணமகள் தேர்வு நடந்த இடத்திலிருந்து வெளியே வந்து தமது தாயாரை அரவணைக்கும் காட்சி தெரிகிறது.

பின்னர் அவர்கள் திருமண இடத்திற்குப் புறப்பட்டனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து இணையவாசிகள் பலர் லட்சுமியின் முயற்சியைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
mediacorp
ஆதாரம் : Others



 


Post a Comment

0 Comments