Ticker

6/recent/ticker-posts

நிரப்பும் வெறுமை!


நெட்பேக் காலியானதும் 
வேகமாகச் சுற்றுகிற
வட்டம்

வராதப் பேருந்தை 
எட்டியெட்டிப் பார்க்கும் 
குதிங்கால்கள்

எதுவுமற்று நடக்கையில்
தென்படுகிற 
பலகாரக்கடை

மகள் துழாவுகையில்
எதுவுமில்லாத
சட்டைப்பையென

வெறுமைகள் நிரப்பும் 
தருணங்களில்
ஒன்றுதிரள்கின்றன
யாருக்கும் கேட்காத 
புலம்பல்கள்!

Post a Comment

0 Comments