ரணிலின் நரித்தனம் இனியும் வேலை செய்யுமா?

ரணிலின் நரித்தனம் இனியும் வேலை செய்யுமா?

இலங்கையில் ஆட்சி செய்த தலைவர்களில் மிகவும் மோசமான ஒரு அரசியல் தலைவர்தான் ரணில் என்று மக்கள் நினைப்பதில் தவறில்லை.

ரணிலின் ஆட்சிக்காலத்தில் வளர்க்கப் பட்டவர்கள்தான் இலங்கை இனவாதிகள்.இலங்கையில் கலவரங்கள் நடைபெற்றபோது மெளனமாக இருந்தவர்தான் இந்த ரணில் விக்ரமசிங்க.பல மோசடிகளுக்கு இடம் கொடுத்தது இவருடைய ஆட்சிக் காலத்திதான் ,இவரால் நாட்டுக்கு எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை.தினமும் புதுப்புத பொய் வாக்குறுதிகளை மக்கள் முன் வைக்கின்றார்.பதவி மோகத்தில் நாளும் ஒரு கருத்தை தெரிவிக்கின்றார்.

பதவி விலகுவதாக  ஒருநாளும்,விலகமாட்டேன் என்று மறுநாளும் முன்னுக்கு பின் முரணாக புலம்புகின்றார்.

ஜனாதிபதி ஊழல் விசாரணையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் பிரதமராக பதவியேற்றவர் ரணில்.

10 பில்லியன் ரூபாய் (65 மில்லியன் டாலர்) பத்திர ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்  தோன்றி விரும்பத்தகாத அரசியல் வரலாற்றை உருவாக்கினார்.

இந்த ஊழல் இலங்கையில் பரந்த வணிகத் தாக்கங்களையும் கொண்டுள்ளது,  இது இலங்கையை ஊழல் பரவலாக இருக்கும் நாடு என்ற உலகளாவிய தோற்றத்தை வலுப்படுத்தியது. 2016 ஆம் ஆண்டு ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை 12 இடங்கள் வீழ்ச்சியடைந்ததற்கு இது ஒரு காரணியாகும்,

நாட்டு மக்களின் கோரிகைக்களை புறக்கணித்து பதவியை பெற்ற முதல் பிரதமர் என்ற பெயரைப் பெற்றவர் ரணில்.இப்படியாக பல குற்றங்கள் ரணில்மீது சுமத்தப்படுகின்றன.

.ஆனாலும் மக்கள் விடுவதாயில்லை ,பதவி விலகினால்தான் போராட்டம் நிறுத்தப்படும் ,என்ற உறுதியான முடிவோடு போராடுகின்றார்கள்.

ரணிலுக்கு ராஜபக்சாக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கடமை இருக்கின்றது.ரணிலை காப்பாற்றியவர்கள் ராஜபக்சாக்கள் .ரணிலின் ஊழல்களை மூடி மறைத்தவர்கள் இந்த ராஜபக்சாக்கள்.

அதாவது இலங்கை வரலாற்றில் நடந்த மிகப்பெரும் கொள்ளையாக கருதப்படும் vat மோசடி. ரணிலின் ஆதரவோடு நடந்ததாக அனைவருக்கும் தெரிந்த விடயம்,

அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் ரணிலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் .ரணிலின் அடிவருடிகள் என்றே கூறவேண்டும்.

அந்தக்கொல்லையில் ஈடுபட்ட ஒரு சிலரை கைது செய்து தண்டனையும் கொடுத்தார்கள் .பலவருடங்கள் சிறை தண்டனை பெற்று விடுதலை அடைந்துள்ளார்கள்.

எனினும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் இன்றும் ரணிலால் பாதுகாக்கபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

குற்றவாளிகள் சொத்துக்களை நெருக்கமானவர்களின் பெயர்களுக்கு பெயர் மாற்றம் செய்து எதுவும் நடவாதது போன்று நாட்டில் சுதந்திரமாக சுற்றுகின்றார்கள் என்றால் அது ராஜபக்சாக்களுக்கு முட்டுக்கொடுக்கும் ரணிலின் ஆதரவோடுதான்.

இப்படி பல ஊழல்களுக்கு ஆதரவாய் இருந்த ரணிலால் பல பில்லியன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் என்னதான் நடக்கும்?

இன்னும் பல கொள்ளைகளுக்கு காரணமான ரணில் இன்று பதவிக்காக அடம்பிடிக்கின்றார்.மக்களின் ஆதரவு இல்லை .அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லை. ராஜபக்சாக்களின் ஆதரவை தவிர வேறு எவரும் இவரை ஆதரிப்பதாக தெரியவில்லை.
 
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள  பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி  பதவியைப் பெற்றுக்கொள்ள திரைமறைவில்  சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

மக்கள் ஆணை இல்லாமல் நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக  ஆகுவதற்காக சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார். 

மரிக்காரின் இந்த குற்றச்சாட்டில் எந்தவித தவறும் இல்லை 

மக்களின் ஆதரவு இல்லாத ஒரு அரசியல்வாதி .நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியவர் என்று பெயர்பெற்றவர் ஒருவரை மக்கள் எப்படி ஜனாதிபதியாகவோ ,பிரதமராகவோ  ஏற்றுக்கொள்வார்கள்?

நாட்டில் எது நடந்தாலும் மெளனமாயிருக்கும் ரணில் போன்ற அரசியல் தலைவர்கள் இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்று மக்கள் கருதுகின்றனர். 

நாளை(13) ஜனாதிபதியும் ரணிலும் பதவி விலகவில்லை என்றால் நாடளாவிய ரீதியில் தீவிர போராட்டங்கள் நடைபெறும் என்று போராட்டக் காரார்களும் தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்கவும்  எச்சரித்துள்ளார்கள்.

இந்நிலையிலும் ரணிலின் மவுனம் ஒரு கேள்விக் குறியாகத்தான் இருக்கின்றது.ஜனாதிபதியின் பதவி விலகல் அறிவிப்பும் ஒரு நாடகமோ என்ற சந்தேகம் எழுகின்றது.

ரணிலின் நரித் தந்திரம்தான் இலங்கையை நாசமாக்கியுள்ளதாக மக்கள் கதைக்கின்றார்கள் .

ரணிலும் ,ராஜபக்சாக்களும் இலங்கை மக்களால் மிகவும் வெறுக்கப் பட்டவர்கள் .அவர்களின்   அரசியல் தந்திரங்கள் இனியும் வேலை செய்யுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 மாஸ்டர் 



Post a Comment

Previous Post Next Post