
எதிர்பாராமல் வசப்பட்ட
பதவி நாற்காலியும்
சட்டைப்பையில் திணிக்கப்பட்ட
உறவினரின் பணமும்
மனக்கசப்பில் நாட்களை நகர்த்திய
அப்பாவின் திடீர் முத்தமும்
சந்திக்க மறுத்த காதலியின்
அபூர்வ புன்னகையும்
ஆபத்தில் ஆதரவு கரம் நீட்டிய
விரோதியின் அன்பும்
திடீரென அழைத்து
போர்த்தப்பட்ட பொன்னாடையும்
தகுதியை மீறி உச்சரிக்கப்பட்ட
நீண்ட புகழுரையும்
சுயநலமின்றி செய்த உதவிக்கு
கைமாறாக திரும்பும் நன்றியும்
இடம், பொருள், ஏவலையும் மீறி
கம்பீரமானவனையும்
ஒருகணம் அசைத்துப் பார்க்கிறது
வெளிப்படும் சிறுபிள்ளையின் குழைவு...
![]()


2 Comments
வணக்கம் சார்.
ReplyDeleteஇந்த இதழிலும் எனது கவிதை வெளிவந்திருக்கிறது...
உங்கள் உன்னதமான உழைப்பில் வளர்ந்து வரும் இனிய இதழில் எனக்கு நீங்கள் வழங்கிவரும் வாய்ப்புகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்...
நேசமுடன்...
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்...
தொடர்ந்தும் எழுதுங்கள் . திறமைக்கு வேட்டையில் தாராளாக இடமுன்டு
ReplyDelete