Ticker

6/recent/ticker-posts

காதல் பிரலாபம்!


ஒரு நேசப் பிரலாபம்
என்னுள்
முட்டி மோதுகிறது...
அழியாத உறவொன்றின்
உணர்வுகளோடு 
சங்கமிக்கிறது...

நொடிகள் தோறும்
நினைவுகளாய்
துளிர்க்கிறது...
காயங்களைக் கிழித்து
ரணப்படுத்தும்
நெருஞ்சியாகிறது...

நீட்சியில்லாத சமரசங்களை
எனக்குள் 
கைச்சாத்திடுகிறது...
ஆவணங்களைப்
பத்திரப்படுத்தியே 
நாளும் வாதிக்கிறது...

கனவுகளுக்குள் நுழைந்தே
இரவுகளை 
இம்சிக்கிறது...
தூக்கம் தொலையும்
நொடிகளில்
பித்துப் பிடிக்க வைக்கிறது...

மீள முடியாத 
நினைவுகளுக்குள்
சிறை பிடிக்கிறது...
விடுதலை விரும்பாத
சிறைவாசத்தை
அவளுக்குள் மட்டும்
யாசிக்கிறது...



Post a Comment

0 Comments