Ticker

6/recent/ticker-posts

இரவோடு நாம்!


பெண்சிங்க கர்சனை
என்குரல் கேட்டு
பட்டாம்பூச்சியின்
இறகு விரிக்கும்
சத்தத்து மிகை தாண்டலில்லாது
மௌனமாக ஒளித்தது
எனது அலைபேசியை 
காதில் திணித்து 
நுழைக்கும் அளவிற்கு.....!

படபடவென வெட்டிக்கிளியிடம்
இறெக்கை வாங்கிப் பறந்தவள்
கூண்டுக்கிளியின்
கோவைப்பழ ருசியின் பசியில்
ஆழ்ந்தவளாய் காட்சியளிக்கிறாள்....
சிறு இறகு இதயத்தில் 
மெல்ல மெல்ல வளர்வதைப் போல்.......

நீ அழகு..
சரியென்றாள்
நின் சிரிப்பழகு
புன்னகைத்தாள்
நேற்றைய குரல் ஒளி மிகை
இன்றில்லை
தொடரும் குரலில் மெல்லிய
 புல்லாங்குழல் 
வலுவிழந்த்தாக தோன்றல்.....

படபடப்புகள்
உடலை ஆக்கிரமிப்பு செய்ததோட
நெஞ்சுக்குழி
மேலும் கீழும் ஊஞ்சலாடி
உண்மையறியாது
தவித்தெழ..

பிடிக்குமென
சொல்லிவிட தவிக்கிறது
முழு உடலையும்
ஆட்படுத்திய
ஏதோ ஓர் இடத்தை நிரப்பிய
காதல் நதி.......
நினைவோடு முந்தி செல்கிறது
நிலவை மனம்
நீந்தலாமா
இரவொடு நாம்.....!


Post a Comment

0 Comments