Ticker

6/recent/ticker-posts

Ad Code



இன்று(2022ஆகஸ்ட் 27ஆம் திகதி)வேட்டைக்கு 6 வருடங்கள்-வாசகர்களுடன் சில நிமிடங்கள்

வேட்டை இன்று(27.08.2022)) ஆறு வருடங்களை பூர்த்தி செய்கின்றதையிட்டு வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். 

சமூகச் சீர்கேடுகளை தவிர்த்து,வாசகர்களுக்கு பயனுள்ள ஆக்கங்களை மட்டுமே பதிவிட்டு ஒரு குடும்பப் பத்திரிகையாக,இன்று உலகம் முழுவதும் பயணிப்பதற்கு வாசகர்களின் அதரவு இன்றியமையாதது.

இச்சந்தர்ப்பத்தில் வாசகர்களுடன் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

கீழே நான் குறிப்பிடுகின்ற சில முக்கியமான கருத்துக்களால் சமூகத்தில் ஒருவராவது சிந்தித்து செயல்பட்டால் அது வேட்டைக்கு கிடைக்கின்ற மிகப் பெரும் பாக்கியமாய் கருதுகின்றேன்.

இன்று சினிமா,ஆபாசம்,இனவாதம் இல்லாமல் பத்திரிகை நடாத்துவது மிகவும் கடினமான காரியம்.இன்றைய பத்திரிகைகள் இப்படிப்பட்ட சமூகச் சீர்கேடுகளை முன்னிறுத்தி தங்களுக்கு வாசகர்களை நிரப்பிக்கொள்கின்றனர்.

பத்திரிகைகளை படிப்பவர்களும் இப்படிப்பட்ட ஆக்கங்களைதான் எதிர்பார்க்கின்றனர்.

மக்களின் உள்ளத்தில் விஷத்தை விதைக்கின்றார்கள்.ஒற்றுமையாய் வாழ்ந்த சமூகங்கள் இன்று எதிரிகளாய் பார்க்கின்றார்கள்.சினிமா என்ற போதையில் பல குடும்பங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

குழந்தைகள் சினிமாக்களை தங்கள் வாழ்கையின் வழிகாட்டியாக நினைக்கின்றார்கள்.

குழந்தைகள் சினிமாக்களை பார்த்து அத்தனை அனாச்சாரங்களையும் கற்றுக்கொள்கின்றனர்.இதற்கு பெற்றோர்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மாலை நேரங்கள் வீடுகளில் டிவி சீரியல் நேரங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.படிப்பையும் மத வழிபாடுகளையும் மட்டுமே மாலைநேரங்களில் கண்டு வந்த நாம் இன்று சினிமாக்களையும் ,சீரியல்களையும் பெற்றோர்கள் குழந்தைகளோடு பார்த்து கூத்தடிக்கின்ற அவலத்தை காண்கின்றோம்.

நூறு வீதம் சினிமாக்களும் ,சீரியல்களும். குடும்பப் பிரச்சினைகள், ஆபாசங்கள்.ரவுடிகளின் வாழ்க்கை,கொலைகாரர்கள்,தாதாக்களின் வாழ்க்கை,காதல் கற்பழிப்பு போன்ற சீர்கேடுகளை வைத்தே கதைகள் பின்னப்பட்டிருக்கும்.

குடும்பத்தில் ஏற்படுகின்ற அத்தனை பிளவுகளுக்கும் இந்த சினிமாக்களும்,சீரியல்களும்தான் காரணம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொலை கொல்லை போன்றவற்றிற்கும் சினிமாவும் சீரியல்களும்தான் முக்கிய காரனமாயிருப்பதாய் தெரிவிக்கப்படுகின்றது.   

இன்று அரசாங்கங்கள் போதை வஸ்துக்களை தடை செய்ய பல சட்டங்களை அறிமுகப்படுத்துகின்றார்கள்.கடுமையான தண்டனைகள் விதிக்கப் படுகின்றன,அப்படியிருந்தும் கூடுவதைதவிர குறைந்தபாடில்லை. 

இவர்களின் சட்டங்கள்,தண்டனைகள் எதனாலும் இவற்றை குறைக்க முடியாது.

அரசாங்கங்கள் நினைப்பதைப் போன்று போதை வஸ்து பாவிக்கின்றவர்கள் மட்டும்தான் இன்றைய பிரச்சினை என்றால் அது தவறு.

மதுவும் ,சினிமாவும் மிக மோசமான போதை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.போதை மருந்துகள் பாவிக்கின்றவர்களால் நடக்கின்ற குற்றங்களைவிட மதுபோதையால் நடக்கின்ற குற்றங்கள்தான் அதிகம்.

மதுபோதையால் தினமும் பல்லாயிரக்கணக்கான குற்றங்கள் நடக்கின்றன.அவற்றையெல்லாம் குற்றங்களாக அரசாங்கங்கள் கவனத்தில் கொள்வதில்லை.

மதுபோதையில் ஒருவர் ஒரு கொலையை செய்தால்,அல்லது வேறு பல குற்றங்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு குறைந்த தண்டனைகள்தான் வழங்கப்படுகின்றன, அதேநேரம் போதை மருந்துகள் பாவிக்கின்ற ஒருவர் ஒரு சிறு தவறு செய்தாலும் மிக கடுமையான தண்டனைகள் வழங்கப் படுகின்றன.

சினிமா ஹீரோக்கள் பத்துபேரை அடித்து ,பத்துப்பேரையும் வெட்டி கொத்தி கொலை செய்தாலும் ரசிக்கின்ற நாம்,ஒரு நாளேனும் அது தவறென்று நினைக்கின்றோமா?

இன்று மக்கள் அதை விரும்பிப் பார்ப்பதுதான் வேடிக்கை குழந்தைகளோடு சினிமாக்களை பார்த்து ரசிக்கின்ற  பெற்றோர்களை பார்க்கின்றோம்.

எவ்வளவு மோசமான ஒரு செயல் இது என்று பெற்றோர்கள் நினைப்பதில்லையா?

சிறு வயது முதற்கொண்டே சினிமா ஹீரோக்கள் பற்றிய போதையை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு ஊட்டிவிடுகின்றனர்.

கணவன் மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் இப்படித்தானிருக்கும் இதுதான் வாழ்க்கை என்ற ஒரு போலியான போதையையும் பெற்றோர்கள்தான் ஊட்டிவிடுகின்றனர்.

துரோகங்களும் திருடுவதும் இப்படிதான் என்ற போதையை போதிப்பதும் இந்த பெற்றோர்கள்தான்.

முக்கியமாக ஒரு தாய் பாலூட்டிக்கொண்டு இப்படிப்பட்ட போதை தரும் சினிமா,சீரியல் பார்க்கும்போது அந்த உணர்வுகளும்  குழந்தைக்கு மாறிவிடுகின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அந்தக்குழந்தை வழர்ந்து வரும்போது அதன் பிரதிபலன்களை பார்க்கலாம்.

சினிமாவில் தோன்றுகின்ற ஹீரோ ஹீரோயின்களைப் போன்று நடப்பது,உடை அனிவது என்று பிள்ளைகளின் அன்றாட நடைமுறைகள் மாறும்போது கொலைகளும்,வேறு பல குற்றச்யல்களிலும் பிள்ளைகள் ஈடுபடாமல் இருப்பார்களா?

பல கொலைகள் செய்து வெற்றிவாகை சூடுகின்ற ஹீரோக்களைப்பார்க்கும் பிள்ளைகள்,"கொலை செய்தால்தான் வெற்றி என்றால் கொலைகள் செய்துபார்ப்பதில் என்ன தவறு?" என்று ஹீரோக்களை பின்பற்றும் பிள்ளைகள் நினைத்துப்பார்க்க மாட்டார்களா?

எவ்வளவு கொடூரம்?

ஆகவே வாசகர்கள் இவற்றைப்பற்றிய விழிப்புணர்வு ஆக்கங்களை எழுதுங்கள்.உங்கள் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்.

வாழ்த்துக்கள் 
நன்றி
வேட்டை ஆசிரியர் 


Post a Comment

0 Comments