
தேவையானவை
1-கட்டு மணல் தக்காளி கீரை
1-கட்டு புதினா (கிடைக்கா விட்டால் தவிக்க)
1- கட்டு மல்லித் தழை
1- துண்டு இஞ்சி
2- பல் பூண்டு
10- சின்னவெங்காயம்
3- பச்சை மிளகாய்
2- தேக்கரண்டி நெய்
1- துண்டு பச்சை மஞ்சள்.
தேவைக்கு ஏற்ப
உப்பு சீனி அல்லது தேன் தயிர்.
செய் முறை
சீனி தயிர் தேன் இவைகளை தவிர்த்து ஏனைய பொருட்களை சுத்தம் செய்து நெய்யில் வதக்கி ஆற விட்டு மிக்ஸியில் மை போல் அரைத்து ஒரு பிலாஸ்ரிக் டப்பாவில் போட்டு குளிர்சாதனப்பெட்டியின் மேல் பக்கமாக வைக்கவும் .
அது ஐஸ் ஆனதும் எடுத்து உங்கள் அளவுக்கு ஏற்ப துண்டு போட்டு மீண்டும் அங்கே வைத்துக்கொள்ளவும்.
தேவைப் படும் போது எடுத்து எத்தனை காப் நீர் என்று அளவு செய்து கொண்டு அதற்கு ஏற்றால் போல் தயிருடன் இதனை சேர்த்து மீண்டும் மிக்ஸியில் கலந்து ஐஸ் சேர்த்து குடிக்கவும் .
ஒரு வருடத்துக்கு வைத்து பாவிக்கலாம்.
(சீனி இல்லாமல் குடிப்பதே சிறந்தது சுவையும்) அல்சர் புண் காய நல்ல மருந்தும் கூட இவை
0 Comments