
"வங்கதேசத்தில் நெரிசல் மிகுந்த முகாம்களில் வசிக்கும் லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வன்முறைத் துன்புறுத்தல்களை விட்டு வெளியேறி மியான்மருக்கு திரும்ப வேண்டும்" என்று ஐநா மனித உரிமைகள் தலைவரிடம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் ஞாயிற்றுக்கிழமை வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவுக்கு வந்து மியான்மர் எல்லைக்கு அருகே உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள ரோஹிங்கியா முகாம்களை பார்வையிட்டார்.
"ரோஹிங்கியாக்கள் மியான்மரின் குடிமக்கள், அவர்கள் திரும்பவும் தங்கள் தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டும்" என்று ஹசீனா தெரிவித்துள்ளார்
பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில் முஸ்லிம் ரோஹிங்கியா சமூகம் மிகவும் மோசமான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளது, அங்கு பெரும்பாலான முஸ்லிம்களுக்கு குடியுரிமை மற்றும் பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 2017 முதல் 700,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் மியான்மரை விட்டு வெளியேறியுள்ளனர், ஒரு கிளர்ச்சிக் குழுவின் தாக்குதல்களைத் தொடர்ந்து மியான்மர் இராணுவம் முஸ்லிம்களுக்கு எதிரான "அழிவு நடவடிக்கையை" தொடங்கியபோது எல்லையைத் தாண்டி வங்கதேசத்திற்குச் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மியான்மரில் பாதுகாப்பு நிலைமை மிகவும்மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
" மியன்மாரில் தற்போதைய சூழ்நிலையானது, மக்கள் திரும்புவதற்கு நிலைமைகள் சரியாக இல்லை " என்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பச்லெட் செய்தியாளர்களிடம் கூறினார்.
"மியன்மாரில் பாதுகாப்பான மற்றும் நிலையான சூழ்நிலை இருக்கும் போது மட்டுமே, திருப்பி அனுப்ப முடியும். "என்றும் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய ஐந்து வருட அகதிகள் நெருக்கடிக்குப் பிறகு, வங்காளதேசம் அதன் பெரும் அகதிகள் மக்கள்தொகையைக் கண்டு பொறுமையிழந்து வருகிறது,
ஆயுதக் குழுக்கள் மற்றும் கிரிமினல் கும்பல்களின் செயற்பாடுகளால் பல அகதிகள் தமது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில், சீனா வெளியுறவு மந்திரி வாங் யீயின் பயணத்தின் போது, ரோஹிங்கியாக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதில் சீனாவிடம் ஒத்துழைப்பை பங்களாதேஷ் கோரியது.
அகதிகளை திருப்பி அனுப்பும் நோக்கில் மியான்மருடன் நவம்பர் 2017 உடன்படிக்கையை சீனா ஏற்படுத்தியது.
அந்த உடன்படிக்கையின்படி அகதிகளை திரும்பப் பெறுவதில் மியான்மர் அரசு மெத்தனம் காட்டுகின்றதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் புதனன்று முகாம்களுக்குச் சென்றபோது, மியான்மருக்குள் பாதுகாப்பை மேம்படுத்த உதவுமாறு அகதிகள் ஐ.நா.வை வலியுறுத்தினர்.
அகதிகள் "தங்கள் குறைகளை, அவர்களின் வலிகளை" ஐநா மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரவித்துள்ளனர்
அகதிகளுக்கு எங்களால் முடிந்ததைச் செய்து வருகிறோம். நாங்கள் அதை தொடர்ந்தும் செய்வோம், ”என்று அவர் கூறினார்.
“ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் இந்த மக்களால் மியன்மாறுக்கு திரும்ப முடியாது.,, அவர்கள் மியான்மருக்குத் திரும்பிச் செல்ல சூழ்நிலைகள் சாதகமாய் இருந்தால் மட்டுமே அவர்களை திருப்பி அனுப்ப முடியும்" என்றும் தெரிவித்துள்ளார்
மியான்மர் இராணுவத்தால் பொதுமக்களுக்கு எதிராக பாரிய அட்டூழியங்கள் நடக்கின்றன.அதிலும் முக்கியமாக ரோஹிங்கியா சிறுபான்மையின மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மிகவும் கொடூரமாக நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மியான்மரில் ரோஹிங்கியாக்கள் மீதான ஒடுக்குமுறை இனப்படுகொலைக்கு சமம் என்று மார்ச் மாதம் அமெரிக்கா கூறியது.
கல்ஹின்னை மாஸ்டர்




0 Comments