நம்முடைய வயிற்றில் இருக்கும் கழிவுகளை அகற்றுவது எப்படி?

நம்முடைய வயிற்றில் இருக்கும் கழிவுகளை அகற்றுவது எப்படி?

பொதுவாகவே நம்முடைய வயிற்றில் கழிவுகள் மற்றும் அழுக்குகள் தேங்கும்.

அப்படி வயிறு கெட்டுப் போயிருந்தால் அவை சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். குறிப்பாக, வாய் துர்நாற்றம் வீசும், பசியின்மை, வயிற்றில் தங்கும் நச்சுக்களால் சிறுசிறு பூச்சி, புழுக்கள் உருவாகும்.

இந்த பிரச்சினைகளால் இயல்பாகவே வயிறு உப்பசம் (bloating), தொப்பை (belly) ஆகியவை உண்டாகும்.

இவற்றை ஆரம்பத்திலே அகற்றுவது நல்லது. இதற்கு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். 

 விளக்கெண்ணெய் 
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி சூடாக்கிக் கொள்ள வேண்டும். தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தால் போதும்.

நன்கு கொதிக்க வேண்டிய தேவையில்லை. அந்த நீரில் கால் ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். வயிறை சுத்தம் செய்யும் பானம் தயார்.

இதை காலையில் வேளையில் தான் குடிக்க வேண்டும். இந்த பானத்தை குடிப்பதற்கு முன்பாக ஒரு டம்ளர் சாதாரண தண்ணீரை குடிக்க வேண்டும். அதன்பிறகே இந்த பானத்தை குடிக்க வேண்டும்.

இந்த பானத்தை குடித்து 15 நிமிடம் முதலே வயிறு சுத்தமாக ஆரம்பித்து விடும். குறைந்தது 5-6 முறையாவது கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதை விடுமுறை நாட்களில் செய்வது நல்லது.

உப்பு நீர்
ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடியளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். குடிக்கவே முடியாத அளவுக்கும் உப்பு இருக்கக் கூடாது.

அதேசமயம் கொஞ்சம் கரிக்கும் அளவுக்கும் இருக்க வேண்டும். இதுதான் நம்முடைய வயிறு மற்றும் குடல் ஆகியவற்றை முழுமையாக சுத்தம் செய்யும்.

காலை எழுந்ததும் அரை லிட்டர் முதல் முடிந்தவரைக்கும் வயிறு முட்ட இந்த உப்பு நீரை குடிக்க வேண்டும். இந்த நீரை குடித்துவிட்டு உட்கார்ந்திருக்கவோ நடக்கவோ செய்யலாம்.

குறிப்பு
வயிற்றிலுள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறிவிட்டதே. இப்போது நிறைய சாப்பிடலாம் என்று கண்டதையும் சாப்பிட கூடாது அதனால் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

வயிறை சுத்தம் செய்யும் முறையை 3 மாதத்துக்கு ஒரு முறை தான் செய்ய வேண்டும். அதுவே போதுமானது.



Post a Comment

Previous Post Next Post