ஆசையாக கட்டிய வீட்டை இடிப்பதா? அஸ்திவாரத்தோடு அலேக்காக வீட்டை நகர்த்தும் முயற்சியில் விவசாயி

ஆசையாக கட்டிய வீட்டை இடிப்பதா? அஸ்திவாரத்தோடு அலேக்காக வீட்டை நகர்த்தும் முயற்சியில் விவசாயி

குடிசை வீடோ? அல்லது மாடி வீடோ? தங்களுக்கு ஏற்றவகையில் ஏதாவது ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பது தான் அனைவரின் கனவாக இருக்கும். இதற்காக பல ஆண்டுகள் உழைத்து சேமித்து வைத்தப் பணத்தின் உதவியோடு ஆசையாய் வீட்டைக் கட்டுவார்கள். இப்படித் தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சுமார் 1.5 கோடி ரூபாய் செலவில் மாடி வீட்டைக் கட்டியிருக்கிறார் பஞ்சாப் மாநிலம் சங்ரூரையையடுத்த ரோஷன்வாலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங்.

தனது வயல் பகுதியிலேயே அழகான வீட்டை அமைத்து வசித்து வந்த நிலையில் தான், அவ்வழியாக டெல்லி அமிர்தசரஸ் கத்ரா விரைவுச்சாலை வருவதாக அதிகாரிகள் கூறி வந்தனர். இதுக்குறித்து விவசாயிடம் எடுத்துரைத்த அதிகாரிகள் இச்சாலை மிகவும் முக்கியமானது என்றும், இந்த பணி முடிவடைந்தால் ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு எளிதில் பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

ஆசையாய் கட்டி வீட்டை இடிக்காமல் நகர்த்தும் விவசாயி…

ஆனால் தான் ஆசையாய் கட்டிய வீட்டை இடிக்க மாட்டேன் என்று எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் தான், இதற்கான இழப்பீட்டு தொகையை அரசு தந்துவிடும் என கூறியுள்ளனர். என்ன செய்வது? என யோசித்த நிலையில், தன்னுடைய வீட்டை புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 500 அடி தூரத்தில் நகர்த்த முடிவு எடுத்துள்ளார். இதற்காக அக்கிராமத்தைச் சேர்ந்த 20 கட்டுமான ஊழியர்கள் உதவியுடன் மாடி வீட்டை அஸ்திவாரத்தோடு பெயர்த்து இடம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுவரை 250 அடி தூரத்திற்கு வீடு நகர்த்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 250 அடி தூரத்திற்கு வீட்டை நகர்த்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேசிய விவசாயி சுக்விந்தர் சிங், என்னுடைய முயற்சியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த வீட்டைக் கட்டுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே வீட்டை ஒரு போதும் இடிக்க மாட்டேன் என்பதால் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் நிச்சயம் வெற்றி பெறுவேன் என தெரிவித்துள்ளார்.

இந்த பஞ்சாப் விவசாயி குறித்து இணையத்தில் வெளியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், விவசாயியின் செயல் பாராட்டுதலுக்குரியது என்றும், இந்த விவசாயி வருமான வரி கட்டியுள்ளாரா? என்பது போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

முன்பெல்லாம் இடப்பிரச்சனையோ? அல்லது நெடுஞ்சாலை எதுவும் வருகிறது என்றால் வீட்டை அந்தளவிற்கு இடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் இன்றைக்கு ஹவுஸ் லிப்டிங்ஸ், ஹவுஸ் ஜாக்கிங், பார்ன் ஜாக்கிங், ஃபீல்டிங் ஜாக்கி என பல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்க்ரூ ஜாக் மூலம் கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து பிரித்து எடுத்து வேறு இடத்திற்கு மாற்றி வைக்கும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
source;news18



Post a Comment

Previous Post Next Post