Ticker

6/recent/ticker-posts

"உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக் கூடாது " -குழந்தைகளிடம் ஜாதி உணர்வை தூண்டும் ஒரு அயோக்கியன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் அந்தப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பள்ளியில் பயின்ற ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள கடைக்கு சென்று தின்பண்டங்கள் வாங்க முற்படும்போது அந்த கடை உரிமையாளர் உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது என்று ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால், கட்டுப்பாட்டு உள்ளது என்று தெரிவிக்கிறார்.

ஆனால் விவரம் தெரியாத அந்த ஒரு சிறுவன் கட்டுப்பாட்டு என்றால் என்ன என்று கேட்கின்றான் அதற்கு அவர் உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக் கூடாது என்று எங்க ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள். அதனால் நீங்கள் யாரும் இங்கு வாங்க முடியாது என்றும் உங்கள் தாய் தந்தையரிடம் போய் இதை சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறு மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வை தூண்டும் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது


Post a Comment

0 Comments