ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூணும் கூட்டு வைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம்.
வேட்டையில ஒரு கொழுத்த மான் கிடைச்சுதாம்.
சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லுச்சாம்.
ஓநாயும் மூணு சம பங்கா பிரிச்சுதாம்.
இதை பார்த்துக்கிட்டு இருந்த சிங்கம், காட்டு ராஜா எனக்கு சமமானவங்களா இவனுங்க, எனக்கு மரியாதை இல்லையா, அவனுங்களுக்கு சம பங்கா அப்படின்னு நினைச்சிக்கிட்டு பட்னு ஓநாயை அறைஞ்சுதாம்.
ஓநாய் அடி வாங்கிட்டு மயக்கமா விழுந்திடுச்சி.
சிங்கம் நரியைக் கூப்பிட்டு பங்கு பிரிக்கச் சொல்லுச்சாம்.
நரியும் பவ்யமா மானோட காது ஒண்ணை மட்டும் தனக்கு எடுத்துக்கிட்டு, மிச்சத்தை சிங்கம் பக்கமா தள்ளுச்சி.
சிங்கம் ஆச்சரியமாகி, நரியே, எப்படி உனக்கு இவ்ளோ பவ்யமும் மரியாதையும் வந்துச்சி அப்படின்னு கேட்டுச்சி.
நரி இன்னும் பணிவா சொல்லுச்சாம், அதோ அங்கே மயங்கி கிடக்கிற ஓநாய் கிட்டே கத்துக்கிட்டேன், அப்படின்னு சொல்லிட்டு ஓடிச்சிடுச்சி.
நீதி : தகாத நட்பு கூடாது.
அனுப்பியவர்;சில்மியா
மன்னார்.இலங்கை
0 Comments