மாம்பழக் கூழ்

மாம்பழக் கூழ்


தேவையானவை
நன்றாகக் கனிந்த
மாம்பழம்  -2
தேவைக்கு ஏற்ப வெள்ளைச் சீனி.
5- மேசைக் கரண்டி சோளம் மா.
3- மேசைக் கரண்டி அரிசி மா
1- தேக்கரண்டி  வெண்ணிலா s.s
1- டம்ளர்  கெட்டிப் பால்
1-சிட்டிகை உப்பு



செய் முறை

இரண்டு மாவையும் 5- டம்ளர் நீர் விட்டு கரைத்து  உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கூழ் போல் கட்டி இல்லாமல்
கிண்டி நன்றாக மா அவிந்ததும் இறக்கி ஆற விடவும்.

பாலை முன் கூட்டியே சூடாக்கி அளந்து எடுத்துக் கொள்ளவும்.

மாம்பழம்  சீனி இவைகளையும் தனியே அடுப்பில் வைத்து பழம் கரையும் வரை கிளறி விட்டு இறக்கி வைக்கவும் 

எல்லாம் ஆறிய பின்னர் மிக்ஸியில் சேர்த்து   அரைக்கவும் 

அப்போது வெண்ணி S.s சேர்க்கவும்

பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைத்து
முழுவதுமாக தயார் ஆனதும் ஒரு பாத்திரத்தில்  ஊத்தி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும் 1 மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிடலாம்

3 நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் ஐஸ்கிரீம்  போல்
சுவையாகவும்  இருக்கும் .



Post a Comment

Previous Post Next Post