சிறுபான்மை இன மக்களின் கலாச்சார அமைச்சுக்கள் எங்கே?

சிறுபான்மை இன மக்களின் கலாச்சார அமைச்சுக்கள் எங்கே?


இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் அனைத்து மதங்களுக்குமான அமைச்சுக்களும் அமைச்சர்களும் நியமிக்கப் 
பட்டதை நாங்கள் அறிந்திருந்தோம். 

இலங்கையில் முஸ்லிம் கலாச்சார அமைச்சு 1978 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டது.

முதல் முஸ்லிம்  கலாச்சார அமைச்சராக (மர்ஹூம்) AHM அஸ்வர் பதவியில் இருந்தார்.

கடைசியாக நல்லாட்சியில் கண்டியைச் சேர்ந்த ஹலீம் அவர்கள் முஸ்லிம் கலாச்சார அமைச்சராக இருந்தார்.
இனவாத பிரச்சனையின் போது முஸ்லிம் அமைச்சர்கள் பதவியிலிருந்து விலகிய சந்தர்ப்பத்தில் இருந்து முஸ்லிம் கலாச்சார அமைச்சர் இருக்கவில்லை.

அந்த சந்தர்ப்பத்தில் பௌத்த கலாச்சார அமைச்சின் கீழ் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அதிகாரமும் அதே அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அமைச்சர் இல்லாத சந்தர்ப்பத்தில் அந்த அமைச்சை ஜனாதிபதி வைத்திருப்பது வழமை அந்த அடிப்படையில் சில காலங்கள் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியிடம் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அதிகாரங்களும் அமைச்சும் வைத்திருந்து

முஸ்லிம் கலாச்சார அமைச்சிக்காக கட்டப்பட்ட 9 மாடி கட்டடத் தொகுதியை ராஜபக்ஷ அரசாங்கம் பறிமுதல் செய்து கலாச்சார அமைச்சகம் என்று பதிவு செய்து அந்த கட்டடத் தொகுதிக்குள் தனித்தனியாக நான்கு பிரிவுகளாக நான்கு கலாச்சார அமைச்சர்களுக்குமான காரியலயமாக அது பயன் படுத்தப்பட்டது.

இறந்த புதிய அரசாங்கம் அமைச்சரவைகளை குறைத்து இணைக்கப்படும் போது முஸ்லிம் கலாச்சார அமைச்சு கலாச்சாரங்களுக்கான அமைச்சரவையின் கீழ் வருமாக இருந்தால் முஸ்லிம் கலாச்சாரத்துக்காக ஒரு  அமைச்சர் நியமிக்கப்படுவாரா?

அமைச்சரவையை சுருக்கி தற்போது   புதிய 25 அமைச்சரவைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து பட்டியலில் முஸ்லிம் கலாச்சார அமைச்சு நிறுவப்பட்டு உள்ளதா? 

பெரும்பான்மை இல்லாத அரசியல் இடைக்கால அரசாங்கத்தில்  கலாச்சார அமைச்சுக்களை பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை பொதுவாக ஜனாதிபதியிடம் வைத்துக் கொள்வது பழமையான ஒரு விடயம்.

தற்போது தீர்மானம் எடுக்கப் பட்டுள்ள 25 அமைச்சுக்களும் நான்கு அல்லது ஐந்து அமைச்சர்களுக்கு இடையில்  பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் பௌத்த கலாச்சார அமைச்சும் அதற்கான அமைச்சரும் நியமிக்கப் பட்டுள்ளார்.அது தவறு இல்லை.

ஏனைய சிறுபான்மை இனங்களின்அமைச்சுக்கள் எங்கே? 

அந்த அமைச்சுகள் யாருடையபொறுப்பில் உள்ளது ?

இலங்கை அரசியல் யாப்பின் அடிப்படையில் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த அதிகாரமிக்க அமைச்சரவை ஒன்று அது முஸ்லிம் கலாச்சார அமைச்சு மட்டுமே.

இந்தத் தனி உரிமைகளை வேறு ஒரு அமைச்சின் கீழ் நிர்வாக முறைக்கு கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படி செய்வதாக இருந்தால் அது சிறுபான்மையின் உரிமையை பறிக்கும் விதி முறையாகும்.

முஸ்லிம் கலாச்சார அமைச்சின் கீழ் முஸ்லிம் கலாச்சார அமைச்சு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டங்கள் மற்றும் வக்கூப் சபை மற்றும் வக்கூப் சொத்துக்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்கள்,பள்ளிவாசல் சொத்துக்கள் வகூப் பண்ணப்பட்ட மதரசாக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ உரிமைகள் அனைத்தும் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்ற விடயத்தையும் நாம் நன்கு உணர வேண்டும்.

ஆகவே சமூகம் மேலே குறிப்பிடப்பட்ட இந்த விடயங்களுக்கு தீர்வைத் தேடிக் கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட  விடயத்தை சற்று  உன்னிப்பாக அவதானித்துப் உங்கள் அறிவுக்கு ஏற்றவாறு தெளிவை பெற்றுக் கொள்ளுங்கள் 

நன்றி 
தொகுப்பு
Sri Lanka United Front Party
General Secretary & Deputy Leader ,
RinTv Founder & Director ,
தேசபந்து,தேசமான்ய
விஷ்வ கீர்த்தி லங்கா புத்ர
GGl Jabeen Mohamed 
+94 77 8979977
rintv.off@gmail.com 





 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post