
இன்று உலகெங்கும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் கடுமையான சட்டங்கள் மூலம் அவற்றை தடை செய்யும் முயற்சியில் பலநாடுகள் போராடிக்கொண்டிருக்கின்றன,
கஞ்சா ,ஹீரோயின் போன்ற போதை பொருள்கள் இன்றைய இளம் சமுதாயத்தினரிடம் பரவலாக பழக்கத்தில் இருப்பதை காண்கிறோம்.
எதிகால சந்ததியினருக்கு இது மிகப் பெரும் ஆபத்தை உருவாக்கும் என்பது நாடறிந்த உண்மை,
பல குடும்பங்களை நாசம்பன்னுகின்ற கஞ்சாவும் ,ஹீரோயினும் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றது.எவ்வளவுதான் தடை செய்யப் பட்டாலும் கடுமையான சட்டங்களை பிறப்பித்தாலும் போதைப் பொருள் பாவனை தினமும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் போதைப் பொருளான கஞ்சாஉற்பத்திக்கு அனுமதி வழங்கும் யோசனையில் உள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயம்.
கஞ்சா ஏற்றுமதியின் மூலம் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்கும் யோசனையை பாராளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன ..
இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிர் செய்வது தொடர்பான யோசனையை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்க உள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த யோசனையை முன்வைக்க உள்ளார்.
இந்த யோசனை எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.
மேற்குலக நாடுகளின் சந்தைகளில் கஞ்சாவுக்கு மிகப் பெரிய கேள்வி நிலவுவதாகவும் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலைமையில் கஞ்சாவை ஏற்றுமதி செய்வது வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட சிறந்த வழியாக இருக்கும் என ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல இடங்களில் சட்டவிரோதமாக ஏற்கனவே கஞ்சா பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. எனினும் அவை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காகவே பயிரிடப்படுகின்றன.
கஞ்சா சேனைகளை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். மேலும் சித்த மருத்துவம் போன்ற சுதேச மருத்துவ தேவைகளுக்காக இலங்கை கஞ்சாவை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத் தேவைகளுக்காக கஞ்சாவை பயன்படுத்தும் நோக்கத்தில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானிக்கின்ற நிலை உருவாகும் ,அதேநேரம் அரசாங்க அனுமதியுடன் பயிரிடப்படும் கஞ்சா உள்ளூர் சந்தைக்கு வராமல் இருக்குமா?
ஐரோப்பாவில் மருந்துக்காண பாவனையை விட அதிகமாக உள்ளூர் பாவனைதான் அதிகம் ,
இளைய சமுதாயம் சீரழிந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் ஐரோப்பாவின் நிலை இலங்கைக்கு வரக் கூடாது.
ஐரோப்பாவில் போதை பொருள் பாவனை சர்வசாதாரணமாக இருக்கின்றது.
ஒருசில ஐரோப்பா நாடுகளில் கஞ்சா போன்ற போதை மருந்துகள் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.போதை பொருள் பாவனை ஐரோப்பா நாடுகளில் சர்வ சாதாரணம் ,
இது எந்த விதத்தில் இலங்கை போன்ற நாடுகளுக்கு பொருந்தும் என்று புரியவில்லை .
கஞ்சா ,ஹீரோயின் ,மது அத்தனையும் போதை பொருள்களின் பட்டியலில் இருக்கும் போது கஞ்சாவை பயிரிடும் திட்டம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை .
கஞ்சா போன்ற போதைப் பொருள்களை உற்பத்தி செய்வதைவிட ,சுயதொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.அதன்மூலம் நாட்டுக்கு சுபீட்சம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் .
போதை பொருள்களின் உற்பத்தியை அரசாங்கம் ஊக்குவிக்கும் நிலை உருவாகினால் அது உள்ளூர் மக்களை பாதிக்கும் நிலை உருவாகலாம்.
போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பது ,வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைவிட கஷ்டமானது.ஒரு சமுதாயத்தையே வேரோடு அழித்துவிடும் .
போதை என்று தெரிந்தும் மதுவை அனுமதித்துள்ளார்கள்.மிகவும் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் புகைப்பழக்கத்தையும் அனுமதித்துள்ளார்கள்.
மீதியாக இருப்பது கஞ்சா,ஹீரோயின் போன்ற போதைப் பொருற்கள்தான்.
அதுவும் ஐரோப்பாவில் சர்வசாதாரனமாகிவிட்டது.
ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த பழக்கங்கள் இன்று மனித இனத்திற்கே சவாலாகியிருக்கின்றது.
ஆகவே கஞ்சா உற்பத்திக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும்.எதிகால சந்ததியினருக்கு பயன்படக்கூடிய நல்ல தொழில் வாய்ப்புக்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும்
தீயவற்றை அளித்து நல்லபழக்க வழக்கங்களை மக்களிடம் கொண்டு போய்சேர்க்க வேண்டும்.
மக்களின் ஆதரவைப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்ற உறுப்பினர்களும் மக்களின் தேவையறிந்து ,அவசியமான திட்டங்களை முன்வைக்க வேண்டும் .
கல்ஹின்னை மாஸ்டர்



0 Comments