
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஐஸ்க், உக்ரைன் நாட்டிற்கு அருகில் உள்ள ரஷ்ய நகரம் என கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய போர் விமானத்தின், விமானிகள் விபத்திற்கு முன்னரே வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளானது சுகோய் சு-34 ரக சூப்பர்சோனிக் போர் விமானம் என தெரிவிக்கப்பட்டது.
ராணுவ விமான நிலையத்தில் இருந்து பயிற்சியாக புறப்பட்ட இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Watch the moment of military #plane #crash at a residential building in #Yeysk , #Russia. pic.twitter.com/TEunPX3KQl
— Gaurav Kumar Singh (@GKSinghJourno) October 17, 2022
இதுகுறித்து, ரஷ்ய அதிபர் மாளிகை,"போர் விமான விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வகையிலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது விமானம் குடியிருப்பு கட்டடங்களின் மீது மோதும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 9 மாடி குடியிருப்பின் மீது போர் விமானம் மோதியதும், அங்கு பெரும் தீ விபத்து ஏற்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
zeenews




0 Comments