Ticker

6/recent/ticker-posts

Ad Code



சிலம்புக்குறள்-6



அடைக்கலக்காதை 
நிறைவு

கோவலன் கனவு
தீங்குநேரும் காட்சிகளை நான்கனவில் கண்டதாலே
தீங்குவரும் வாழ்விலென்றான் அங்கு.

மாடலன் கூற்று
இந்தத் துறவறப் பள்ளிப் புறமதிலில்
தங்காமல் மாநகர் செல்.

மறையோன், கவுந்தி அடிகளும் சேர்ந்து
குறையற்ற கண்ணகியைப் பார்த்து

களங்கமற்ற மாதரி உங்களைத் தாய்போல்
நலமுடன் காப்பாள்பார் என்று

தளிர்மேனி கண்ணகியை மாதரி நல்லாள்
களிப்புற ஒப்படைத்தாள் காண்.

மாதரி! தாயாக மாறியே கண்ணகியைக்
காப்பாற்றச் சொன்னாள் உவந்து.

மாதரி,கண்ணகி,கோவலன் மூவரும்
மாதரி யோடு நடந்து

புறப்பட்டார் மாதரியின் வீடுநோக்கி! அங்கே
நடந்தனர் 
காட்சிகளைக் கண்டே உவந்து.

மதில்வாயில் தாண்டி மாதரியின் வீட்டில்
அடியெடுத்து வைத்தனர் சேர்ந்து.

கொலைக்களக்காதை
ஆய்ச்சியர் வீட்டிலே கண்ணகியைத் தங்கவைத்துப்
பார்க்க மனமற்ற மாது

அழகிய பந்தலுடன் கூடிய வீட்டில்
அழகியைத் தங்கவைத்தாள் அங்கு.

என்மகளாம் ஐயை உனக்குதவி செய்திருப்பாள்!
பொன்போல் உனைக்காப்பேன் பார்.

மாதரி தங்கவைத்துப் பாத்திரங்கள் கொண்டுவர
ஆயரிடம் சொன்னாள் உவந்து.

பலாக்காய் வெள்ளரிக்காய் மாதுளங்காய் தேன்மா
பழுத்தவாழை வைத்தாள் மகிழ்ந்து.

செந்நெல் அரிசி, சுவைப்பால் நெய்யுடன்
தந்திருந்தாள் ஏற்றுக்கொள் என்று.

இவைகளை வைத்துக் கணவனுக்கு ஏற்ற
சுவையுணவைச் செய்தாள் சமைத்து.

கோவலன் வருந்துதல் 
கோவலன் வந்தான்! அமர்ந்தான் அமுதிட்டாள்!
ஆவலுடன் உண்கவென்றாள் மாது.

கணவனுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்தாள்!
அணைத்தான் கலங்கினான் காண்.

குற்றங்கள் செய்தேன்! குணவதிநீஎன்னையோ
அக்கறையாய் ஏற்றாய் மறந்து.

மாமதுரை போகலாம் உற்றவளே என்றதும் 
பூமகளே வந்தாய் உடன்.

துன்பத்தில் வாடி வதங்கிவந்தாய் ஆருயிரே!
என்னசெயல் செய்துவிட்டாய் நீ?

கண்ணகியின் ஆறுதல்
பிரிந்திருந்த காலத்தில் உன்பெற்றோர் வந்தார்!
பிரிவை மறைத்திருந்தேன் நின்று.

உன்பெற்றோர் எந்தன் பொறுமையைப் பாராட்ட
புன்னகைத்தேன் பொய்க்கோலம் பூண்டு.

என்நிலையைக் கண்டே வருந்தினார் ! உங்களுடன்
ஒன்றிக் கலந்திருந்தேன் நான்.

எனவே புறப்படு என்றதும் வந்தேன்!
மனமுருகிச் சொன்னாள் பார்.

கோவலன் கண்ணகியை நாமணக்கப் பாராட்டி
ஆவலுடன் பார்த்தான் அணைத்து.

பூமகளே! கற்பின் கொழுந்தே!அழகியே!
காற்சிலம் பொன்றை எடுத்து

நகர்சென்று விற்று வருகின்றேன்!நீயோ
அகச்சுமை இன்றி இரு.

துடித்துவந்த கண்ணீரை அங்கே மறைத்தே
நடந்துசென்றான் தன்வீட்டை விட்டு.

கோவலனை நோக்கி எருதொன்று பாய்ந்துவந்த
தீய நிமித்தத்தைக் கண்டு

உணராமல் அந்தக் கடைவீதி தன்னில்
மனமொன்றிச் சென்றான் நடந்து.

நூறுபொற் கொல்லர்கள் பின்வரவீதியிலே
பீடுநடை பொற்கொல்லன் கண்டு

அரசி அணிய சிலம்பைப் பார்த்துத்
தரங்கூறு வாயோநீ இங்கு?

மன்னர் அணிமணிகள் செய்வதில் வல்லவன்
என்றுசொன்னான் பொற்கொல்லன் தான்.

கண்ணகியின் காற்சிலம்பைக் கோவலன் கொல்லனுக்கே
அன்புடன் காட்டினான் அங்கு.

கிளிச்சிறைப் பொன்னாலே நேர்த்தியாய் செய்த
சிலம்பினைப் பார்த்தான் வியந்து.

தான்திருடிச் சென்றிருந்த காற்சிலம்பும் இச்சிலம்பும்
காண்பதற்கு ஒன்றென் றுணர்ந்து

இச்சிலம்பு தேவிக்கே முற்றும் பொருத்தமாகும்!
சற்றிங்கே தங்கி இரு.

மன்னனுக்குச் சொல்லித் திரும்பி வருகின்றேன்!
என்றுரைத்துச் சென்றான் நகர்ந்து.

மன்னனைச் சந்தித்தல்
மாநகரில் ஆடல் மகளிரின் இன்னிசையில்
வேந்தனோ மெய்மறந்தான் என்று

அரசியோ ஊடலேந்தி அந்தப் புரத்தில்
விரைந்தே நுழைந்தாள் சினந்து.

மன்னனும் பின்சென்றான்! அந்தநேரம் பொற்கொல்லன்
பொன்னரசி காற்சிலம் பெடுத்த

திருடனென் வீட்டில் இருக்கின்றான் மன்னா!
உரைத்தான் மனதுள் நகைத்து.

காவலரை ஏவி சிலம்பிருந்தால் கள்வனைக்
காவலுடன் கொன்றுவந்து காட்டு.

எண்ணியதோ ஒன்றாகும்! சொல்லியதோ ஒன்றாகும்!
மன்னனோ சொல்பிறழ்ந்தான் பார்.
(தொடரும்)


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments