புறம் பேசுவோர்
அகம் இருண்டோர்
அருகே நின்று
முகம் மலர்ந்து
புன்னகை புரிந்து
வலம் திரும்பி
வாயசைப்பார்
வார்த்தைகளை
மென்று செய்கையோடு
தரம் கெட்டோர்
குணம் கண்டு
கரம் கூப்பாதே
நீயும் நின்று
மறுத்தும் போன
மனிதர்களை
வெறுத்துப்போ
சரிக்கிச் சமமாய்
நிறுத்திப் பார்க்காதே
சரித்து விடுவார் உனது
வாழ்வையே என்றும்
நேருக்கு நேர் நிற்போரிடம்
நெஞ்சை நிமிர்த்து
புறம்பேசுவோரை
புறம்பாகவே நிறுத்து
ஆர் எஸ் கலா
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments