குறள் 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
ஊக்கம் இருக்க ஒருத்தரைத் தான் எல்லா இருக்கவராச் சொல்லலாம். ஊக்கம் இல்லைன்னா, அவருக்கு வேற எல்லாம் இருந்தாலும் ஒண்ணும் இல்லாதவரு மாதிரி தான்.
குறள் 593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
எப்பமும் ஊக்கத்தோட இருக்கவங்க, சேர்த்து வச்ச சொத்து எல்லாத்தியும் தொலைச்சிட்டாக் கூட, எல்லாம் போச்சேன்னு மனங் கலங்க மாட்டாங்க.
குறள் 595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
தாமரைப் பூத் தண்டோட அளவு, அது பூத்திருக்க கொளத்துல தண்ணீர் எம்புட்டு ஆழம் இருக்கோ அம்புட்டு தான் இருக்கும். அது மாதிரி தான் ஒரு ஆளோட உயர்வும் அவர் மனசுக்குள்ள இருக்க ஊக்கத்தின் அளவைப் பொறுத்து இருக்கும்.
குறள் 598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
மத்தவொளுக்கு வாரி வழங்கக் கூடிய நல்ல மனசு இல்லாதவங்க, இந்த ஒலகத்துல நாங்க பெரிய வள்ளல்னு சொல்லி பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது.
குறள் 600
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
ஊக்கத்தோட இருக்கதுதான் ஒருத்தனுக்கு பலம். இது இல்லாதவன் மனுசன் பாக்கதுக்கு மனுசன் மாதிரி இருந்தாலும் அவம்லாம் மரம் மாதிரி தான்.
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments