Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

குளிக்காமல் இருப்பதுதான் சுகாதாரமாம் .. கட்டாயப்படுத்தி குளிக்க வைத்ததால் இறந்துபோன்ற 94 வயது முதியவர் !


தினமும் குளித்துவந்தால்தான் சுகாதாரம் என்றும், அப்படி நடந்தால்தான் கிருமிகள் போன்றவை உடலை தாக்காது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர். ஆனால் சில நேரம் மருத்துவ நிபுணர்கள் கூறுவது நடக்காமலும் போய்யுள்ளது.

அப்படி ஒருவர்தான் ஈரானைச் சேர்ந்த அமு ஹாஜி. இவரின் சிறு வயதில் உடலில் தண்ணீர் பட்டால் உடம்பு கொதிப்பதைப் போல இருந்ததால் சிறுவயதிலேயே குளிப்பதை அடியோடு நிறுத்தினார். முதலில் அவரை கட்டாயப்படுத்தி குளிக்கவைத்த உறவினர்கள் அதன் பின்னர் அவரை அப்படியே விட்டு விட்டார்கள்.

ஆனால், ஒரு கட்டத்தில் அவர் உடலில் அதிகப்படியான துர்நாற்றம் வீசியதால் அவர் கிராமத்தில் இருந்து தள்ளி வாழ்ந்து வந்தார். சாலையோரங்களில் இறந்துகிடக்கும் விலங்குகளை உணவாகவும், அதன் கழிவுகள் கொண்டு தானே தயார் செய்யும் சிகரெட்டைக் குடித்து வந்ததாக அந்த கிராமத்தினர் கூறியிருந்தனர்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக அவரை குறித்து கடந்த 2013-ம் ஆண்டில்" The stranger life of Amou haji" என்ற ஆவணப்படம் வெளியானது. அதன்பின்னர் இவர் உலகபுகழ் பெற்றார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரின் உறவினர்கள் இவரை கட்டாயப்படுத்தி குளிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு பின்னர் கடும் மனஉளைச்சலில் இருந்த அவர், தனது 94ம் வயதில் தேஜ்கா என்னும் அவரின் சொந்த கிராமத்தில் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் வெளியான நிலையில், அவருக்கு பலரும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.
SOURCE;kalaignarseithigal

Post a Comment

0 Comments