காந்தியை தேசத்துரோகி என விமர்சித்த இந்து முன்னணி நிர்வாகியின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததில் காந்திக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. அதுவரை உயர்சமூகத்தை சேர்ந்தவர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் அதன்பின்னரே வெகுஜன மக்கள் பங்கேற்கும் இயக்கமாக மாறியது.
அதன்பின்னர் இந்திய சுதந்திர போராட்டத்தின் முகமாக காந்தி மாறினார். இந்திய பொதுமக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் காந்தியின் பங்கு அளப்பரியது. ஒரு இந்துவாக இருந்தாலும் அனைத்து மதத்தையும் அரவணைத்து சென்றார். மதசகிப்பே இந்திய நாட்டுக்கு அவசியமானது என்ற கருத்தை பலமுறை பொதுஅரங்கில் கூறி மத ஒற்றுமையை மக்களிடையே விதைத்து வந்தார்.
காந்தியின் இந்த செயல் வலதுசாரி இந்துத்துவவாதிகளிடையே பெரும் கோவத்தை ஏற்படுத்தியது. இந்திய மத ஒற்றுமைக்கு ஆதாரமாக காந்தி இருப்பதால் அவரை கொலை செய்யவேண்டும் என பலர் பகிரங்கமாகவே பேசத்தொடங்கினர்.
அதன்விளைவாக தீவிர இந்துத்துவவாதியும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கருடன் நெருங்கிய தொடர்புகொண்டவருமான கோட்ஸேவால் காந்தி சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். சுதந்திரத்துக்கு பின்னரும் இந்துத்துவவாதிகள் காந்தியை தொடர்ந்து விமர்சித்தே வந்தனர். பல மேடைகளில் காந்தியை அவதூறு பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது இந்து முன்னணியை சேர்ந்த அசோக் என்பவர் காந்தியை தேசவிரோதி என பொதுமேடையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேறொரு நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் மேடை ஏறி பேசத்தொடங்கிய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஒருவர் காந்தியை தேச துரோகி என விமர்சித்ததோடு சாவர்க்கரை தேசப்பிதா என்று கூறினார். இதற்கு அங்கு இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SOURCE;kalaignarseithigal
மேலும்..... தமிழ்நாடு செய்திகள் படிக்கவும்
மேலும்..... இலங்கை செய்திகள் படிக்கவும்
மேலும்..... இந்தியா செய்திகள் படிக்கவும்
மேலும்..... உலக செய்திகள் படிக்கவும்
மேலும்..... விளையாட்டு செய்திகள் படிக்கவும்
மேலும்..... இலங்கை செய்திகள் படிக்கவும்
மேலும்..... இந்தியா செய்திகள் படிக்கவும்
மேலும்..... உலக செய்திகள் படிக்கவும்
மேலும்..... விளையாட்டு செய்திகள் படிக்கவும்
Tags:
தமிழ்நாடு