Ticker

6/recent/ticker-posts

இங்கிலாந்தின் இளம் வயது பிரதமர்

நாட்டின் ஆழ்ந்த பொருளாதார சவாலை எதிர்கொள்ள ஒற்றுமைக்கான வேண்டுகோளை, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக் முன்வைத்துள்ளார். 

பிரித்தானியாவின் புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ரிஷி சுனக் வெற்றி பிரித்தானியாவின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை துறப்பதாக கடந்த 20ஆம் திகதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் போட்டியாளரான பென்னி மோர்டான்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறத் தவறியதால் ரிஷி சுனக், கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்றார்.

மேலும்..... உலக  செய்திகள் படிக்கவும் 

இதனையடுத்து ரிஷி சுனக் தமது முதல் உரையில், தனது கட்சியையும் இங்கிலாந்தையும் ஒன்றாகக் கொண்டு வருவதே தமது முன்னுரிமை என்று கூறியுள்ளார். இன்று பதவியேற்கலாம் ரிஷி சுனக் இங்கிலாந்தின் முதல் ஆசியப் பிரதமராகவும், 200 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் இளம் வயது பிரதமராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post a Comment

0 Comments