Ticker

6/recent/ticker-posts

Ad Code



எதைத் தான் தேடுகின்றாய்...!


பெரும் சாபத்தில் புதைந்திருப்பவளிடம்
எதைத் தான் தேடுகின்றாய்

ஒரு சின்னப் புன்னகை 
 மிஞ்சிமிஞ்சிப்போனால் 
இனிக்கும் சிறு வார்த்தை

இவை தவிர
கொடுப்பதற்கு அவளிடம் 
எதுவுமில்லை 
என்றான போதும்

எல்லைகள் தாண்டி
எதையோ தேடும் 
உன் முயற்சிகள் மட்டும் 
முடிந்தபாடில்லை

பின்னாளில்
 சோர்வுகள் புலப்பட
ஒன்றை  வருத்தங்களோடு
அறிந்துகொள்வாய்

உருவம் அழிந்து
எலும்புகள் கரைய 
மரணத்தை சுவைத்தவளுக்குள்
இனியும்
ஆச்சரியம் தரும் ஏதாவது
உண்டாயென...

வானம்பாடி.

Post a Comment

0 Comments