Ticker

6/recent/ticker-posts

Ad Code



பணம் ஒரு மார்க்கமா மதமா?

உலகில் வாழ் மனிதயினம்
மன்றாடிக் கொண்டு தரிசனம்
செய்யும் ஒரே இடம் பணம்.
 
எல்லா மதத்தவர்களும்  
மதவழிபாடுகளில் மாற்றும்
கண்டறிந்த போதும் கூட
மனிதன் மறக்காமல் நாடுவது
பணமெனும் தொட்டில் தரிசனமே.
 
உறவுகள், நண்பர்கள் ஒட்டி
விளையாட பணமெனும் பசை
உன்னிடம் இல்லையெனக் கண்டால்
கைகோர்த்த எல்லாமே கழண்டு
போய்விடும் அதேநாள்.
 
நீ தடுமாறி கீழே விழும்
போது தாங்கி பிடிப்பவனும்
தடம் மாறும் போது தட்டிக்
கேட்பவனும் தான்
உண்மையான நட்பு..
 
எந்த உறவை மறந்தாலும்
நல்ல நட்பை யாரும்
வாழ்நாளில் மறப்பதில்லை.
 
நட்பு என்றால் உன் மனதில்
வைக்க வேண்டிய வரிகள்
பழகும் போது உண்மையாய்
இருக்க வேண்டும். பழகிய
பின்பு உயிராய்
இருக்க வேண்டும்.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.

 


Post a Comment

0 Comments