
நாட்டு மக்களின் நலன் கருதி ,எதிகால சந்ததியினரின் நலன் கருதி ,காலி முகத்திடல் போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது.
எனினும் நாட்டின் நிலைமை மீண்டும் மீண்டும் படு பாதாளத்தை நோக்கிச் செல்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக ஐ.நாவில் தெரிவிக்கப்பட்டது.
அமைதியாக போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது உலக அரங்கில் இலங்கைக்கு அவப் பெயரை தேடியுள்ளது.
போராட்டக் காரர்களை கைது செய்து சித்தரவதை செய்து போராட்டத்தை அடக்க ரணில் அரசு முயன்றாலும் இன்றுவரையிலும் மக்களின் ஆவேசம் குறையவில்லை
நேற்று காலிமுகத்திடலில் அஹிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை அடித்து விரட்டி முக்கியமான ஒரு சிலரை கைது செய்துள்ளது மீண்டும் மனித உரிமை மீறல் நடந்துள்ளதைக் காட்டுகின்றது.
ரணில் அரசு மக்களை சர்வாதிகார முறையில் அடக்க நினைக்கின்றது ,இலங்கைக்கு மிகப் பெரும் பின்னடைவைத்தான் கொடுக்கும்
அஹிம்சை வழியில் போராடியவர்களின் கைதானது உலக அரங்கில் மீண்டும் ஒரு அவப் பெயரை தேடித் தரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை
நாட்டு மக்களுக்காக முன்னின்று அஹிம்சை வழியில் போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்
இன்றுள்ள சூழ்நிலைக்கு அதுவே சிறந்த வழி.சர்வாதிகார அடக்கு முறை தோல்வியில் முடியும் என்பதை மறந்துவிடக்கூடாது.



0 Comments