Ticker

6/recent/ticker-posts

ஒருதலை காதலால் வெறிச்செயல்.. பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை



சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம்(47), வரலட்சுமி (43). வரலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் சத்தியா (20) தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் சத்தியாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் சத்தியா கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது சதீஷ் சத்யாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது அதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தாம்பரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ் சத்யாவை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில் சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர். 

SOURCEnews18

Post a Comment

0 Comments