134 உயிர்களை காவு வாங்கிய மோர்பி பாலம்… இது முதல் முறை அல்ல… வரலாறு கூறுவது என்ன?

134 உயிர்களை காவு வாங்கிய மோர்பி பாலம்… இது முதல் முறை அல்ல… வரலாறு கூறுவது என்ன?

மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ள நிலையில் 1979 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ள நிலையில் 1979 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகரில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையான பாலம், விரிவான பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு ஐந்து நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (30-10-2022) மாலை 6.30 மணியளவில் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தில் மக்கள் கயிறு கம்பிகளை பிடித்துக்கொண்டு நிற்கும் வேளையில், திடீரென்று கயிறுகள் அறுந்து பாலம் கவிழந்தது.

இதில் நொடிப் பொழுதில் பாலத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் ஆற்றில் விழுந்து மூழ்கினர் .    தீபாவளி விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முக்கிய சுற்றுலா தலமான பாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது பாலம் இடிந்து விழுந்ததில் 134 பேர் உயிரிழந்தனர். மச்சு நதியில் இந்த அளவு சோகம் ஏற்படுவது இது முதல் முறையல்ல. 1979 இல், இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் சுமார் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி மச்சு ஆற்றில் ஒரு அணை இடிந்து விழுந்த விபத்தில் சுமார் 1,500 பேர் மற்றும் 13000க்கும் மேற்பட்ட விலங்குகள்  உயிரிழந்தது.   அதைத் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உள்ளூர் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மச்சு அணை நிரம்பி வழிந்தது. மதியம் 3.15 மணியளவில் அணை உடைந்து 15 நிமிடங்களில் அணையின் தண்ணீர் நகரம் முழுவதும் சூழ்ந்தது. இந்த துயரமான விபத்துக்குப் பிறகு இந்திரா காந்தி மோர்பிக்குச் சென்றபோது, துர்நாற்றம் காரணமாக தனது சுற்றுப்பயணத்தை நடத்துவது மிகவும் கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
asianetnews


 


Post a Comment

Previous Post Next Post