ஹேக் செய்யப்பட்ட தொழிலதிபரின் மொபைல் ஃபோன்… ரூ.1 கோடியை இழந்ததால் அதிர்ச்சி!!

ஹேக் செய்யப்பட்ட தொழிலதிபரின் மொபைல் ஃபோன்… ரூ.1 கோடியை இழந்ததால் அதிர்ச்சி!!

மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதில் சுமார் ஒரு கோடி ரூபாயை மகாராஷ்டிராவின் தொழிலதிபர் ஒருவர் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் தானே நகரில் ஒரு தொழிலதிபரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக அந்த தொழிலதிபரின் தனது வங்கி கணக்கில் இருந்த 99.50 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதுக்குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நவம்பர் 6, 7 ஆம் தேதிக்கு இடையில் இந்த ஹேக்கிங் நடந்துள்ளது.

தொழிலதிபரின் வங்கிக் கணக்குகளில் இருந்து மற்ற கணக்குகளுக்கு நெட் பேங்கிங் மூலம் பணம் மாற்றப்பட்டுள்ளது. அவரது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதால் 99.50 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதை அடுத்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
asianetnews



 


Post a Comment

Previous Post Next Post