பேரறிவாளனை அடுத்து நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பேரறிவாளனை அடுத்து நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேர் சிரைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாகத் தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்தத்தீர்ப்புக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்றிருந்தனர். மேலும் மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதற்கான சட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதற்கிடையில் பேரறிவாளன் விடுதலை வழக்கைச் சுட்டிக் காட்டி நளினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
kalaignarseithigal


 

Post a Comment

Previous Post Next Post