ஐபிஎல்தான் எல்லாமே.. விட்டுக்கொடுக்காத கடைக்குட்டி சிங்கம்.. சாம் கரனை பாராட்டும் ரசிகர்கள்!

ஐபிஎல்தான் எல்லாமே.. விட்டுக்கொடுக்காத கடைக்குட்டி சிங்கம்.. சாம் கரனை பாராட்டும் ரசிகர்கள்!

டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சாம் கரன், ஐபிஎல் போட்டிகளில் தான் நிறைய கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.

8வது டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை கைபற்றியது. அதில் சாம் கரன் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்று அசத்தியுள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்ற 8வது டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களை எடுத்தது.

சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டையும் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜொர்டன் தலா 2 விக்கெட்டை எடுத்தனர். இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்தி இருந்த சாம் கரன் தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றார். முன்னதாக நடப்பு டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியல் ஒன்றை ஐசிசி வெளியிட்டது.

அதில் ஐசிசி பரிந்துரைத்துள்ள வீரர்களிள் யார் ரசிகர்களின் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அந்த வீரர் ஐசிசி தொடர் நாயகன் விருது வெல்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ஐசிசி தொடர்நாயகன் விருதுக்கு விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சதாப் கான், ஷாகின் ஆப்ரிடி, சாம் கரண், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் கேல்ஸ், சிக்கந்தர் ராசா, ஹசரங்கா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இறுதி போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சாம் கரனுக்கு தொடர் நாயகர் விருந்து கிடைத்துள்ளது.

சாம் கரன் ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் விருது பெற்ற பின் பேட்டி அளித்த அவர், “ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம், அங்கிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மிகவும் உதவியாக இருந்தது.

இத்தகைய பெரிய தொடர்கள், பல வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது ஓர் அற்புதமான தருணம். ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாட வருவேன்” என தெரிவித்தார். உலகக்கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு ஐபிஎல் காரணம் என பேச்சு கிளம்பியுள்ள நிலையில் சாம்கரணின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
news18


 


Post a Comment

Previous Post Next Post