ஆட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

ஆட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

ஆட்டுக்கு ஒன்று 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டு இருக்கும் சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

உலகில் பல வினோதமான விஷயங்கள் நடைபெறுவதையும், அரங்கேறுவதையும் பார்த்தும், கேள்விப்பட்டும் இருப்போம். அதிலும் குறிப்பாக விலங்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் பெரியதாக இருக்கும்.

அந்த வகையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரூம்பேக் கிழக்கு பகுதியில் அடியு சாப்பிங் என்ற பெண் நடந்துசென்றுள்ளார். அப்போது செம்மரி ஆடு ஒன்று வேகமாக வந்து பின்னால் அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் முட்டியுள்ளது.

இதனால் அந்த பெண்ணின் மார்பு எலும்புகள் முறிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால், அந்த ஆட்டுக்கு எதிராக போலிசில் எழுந்த புகாரில் ஆட்டை பிடித்து போலீசார் காவல் நிலையத்தில் கட்டி வைத்துள்ளனர்.

இந்த வழக்கு சில மாதங்கள் நடந்த நிலையில், வழக்கு விசாரணையில் அந்த பெண்ணை ஆடு முட்டியே கொன்றதை அங்குள்ள மக்கள் நேரில் பார்த்துள்ளதை சாட்சியாக கூறியுள்ளனர்.

பின்னர், அந்த ஆட்டை குற்றவாளி என நீதி மன்றம் ஆட்டுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போது அந்த ஆடு சூடான் லேக் மாநில இராணுவ சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also read MORE...வினோத உலகம்


Post a Comment

Previous Post Next Post