Ticker

6/recent/ticker-posts

Ad Code



மூட்டை சுமந்த முடிமன்னர்

கலீஃபா ஹஸரத் உமர்(ரலி) அவர்கள் வழக்கம் போல் ஒரு நாள் இரவு தமது தோழரோடு நகர்வலம் வந்து கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு குடிசையில் குழந்தைகளின் அழு குரல் கேட்கிறது. 
கலீஃபா அவர்கள் குடிசைக்குள் பார்த்தார்கள். அங்கு ஒரு பெண் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எதையோ வேக வைத்துக் கொண்டிருக்கிறாள்.  

பிள்ளைகள் உணவு கேட்டு அழுது கொண்டிருக்கின்றார்கள்.

கலீஃபா அவர்கள் அப்பெண்ணை விசாரித்ததில் அவள் ஒரு விதவையென்றும் பசி தாங்காது குழந்தைகள் அழுவதால் வெறும் தண்னீரை அடுப்பில் வைத்து உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது  என அவர்களை பொய் சொல்லி சமாதானப்படுத்துவதாகவும் கூறுகிறாள்.

கலீஃபாவின் கண்கள் குளமாகின்றன. எனது ஆட்சியில் இந்த அவல நிலையா? என ஏங்கிய அவர்கள், அவசரமாக தமது இல்லம் வந்து கோதுமை மாவும் மற்றும் சில உணவுப் பொருள்களையும் தானே தனது தோளில் சுமந்தவராக அப்பெண்ணில் வீடு திரும்புகிறார்.

வழியில் அவரது தோழர் உணவுப் பொதிகலை தான் சுமப்பதாகக் கூறவே கலீஃபா அவர்கள், “மறுமையில் எனது பாவச்சுமைகளை நீ சுமப்பாயா?” என கூறி அதற்கு மறுத்து தானே அதை சுமந்து சென்று தானே அதில் உணவு சமைத்து அப்பெண்ணுக்கும் பிள்ளைகளுக்கும் உண்னக் கொடுக்கிறார்கள் 

அத்தோடு மாதா மாதம் அரச களஞ்சிய சாலையிலிருந்து அப்பெண்ணுக்குத் தேவையான பொருட்களை வழங்கும் படியும் உத்தரவிடுகிறார். இதனானே இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் இவரை மூட்டை சுமந்த முடிமன்னர் என வர்ணிக்கின்றனர்.

aarabdul

 



Post a Comment

0 Comments