காதிகளாக பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

காதிகளாக பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு


காதிகளாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற சில முஸ்லிம் பெண்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து பல முஸ்லிம் பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றம் நேற்று (8) நிராகரித்துள்ளது.

தற்போது காதிகளாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் மௌலவிகள், மற்றும் ஆண் சட்டத்தரணிகள், பட்டதாரிகள், நியமிக்கப்படுகின்றனர்.இதனால் தமது அடிப்படை உரிமை மீறப்படுகின்றது என சில பெண்கள் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

மேலும் கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி பத்திகை மூலமாக காதிகளாக ஆண்கள் விண்ணப்பிக்கும் படி கூறப்பட்டிருந்த நிலையில்,  தமது அடிப்படை உரிமை மீறப்படாடுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் இதனால் பெண்கள் விண்ணப்பிக்க உள்ள உரிமை மீறப்பட்டுள்ளதாகவும். இதனால் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வகையில், உரிய வர்த்தமானி அறிவிப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தமது மனுவில் கோரியிருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் அடிப்படை உரிமை மீறல் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

தற்போது தடைமுறையில் இருக்கும் (MMDA) முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் பெண்களுக்கு காதிகளாக நியமிக்கும் வாய்ப்பு சட்டரீதியாக இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

( பேருவளை ஹில்மி )


 


Post a Comment

Previous Post Next Post