மாரடைப்பு, இதய செயலிழப்புக்கு முக்கிய காரணம் இந்த சத்து குறைவதுதான்! வெளியான புதிய ஆய்வு முடிவு!

மாரடைப்பு, இதய செயலிழப்புக்கு முக்கிய காரணம் இந்த சத்து குறைவதுதான்! வெளியான புதிய ஆய்வு முடிவு!

மாரடைப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு அடுத்த ஐந்து வருடத்திற்குள் இதய செயலிழப்பு ஏற்படும் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறுகிறார். இந்த தலைமுறையில் அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு மூன்று லட்சம் பேர் இதய செயலிழப்பினால் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தி ஜார்னல் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது : மாரடைப்பு ஏற்படும் பலருக்கு நாள்பட்ட இதய செயலிழப்பு இருந்ததற்கான அறிகுறிகளை பற்றி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைப் பற்றிய ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளிவந்துள்ள நிலையில், உடலில் உள்ள இரும்பானது அதில் முக்கிய பங்காற்றுவதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதயத்தில் கெடுதல் செய்யக்கூடிய கொழுப்பு திசுக்களை உருவாக்கி அதன் மூலம் இதய செயலிழப்பிற்கு வழிவகுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

விலங்குகளை வைத்து ஆய்வு : 
முதற்கட்டமாக விலங்குகளின் மீது ஆறு மாதத்திற்கும் மேல் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை நீக்கும்போது இதயத்திற்கு கெடுதல் செய்யக்கூடிய கொழுப்பு குறைவதை அவர்கள் கண்டறிந்து உள்ளார்கள். மேலும், அவ்வாறு இரும்புச் சத்தை நீக்கியபோது இதயத்தில் புதிய கொழுப்பு திசுக்கள் உருவாக்கமும் குறைந்துள்ளது என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

மாரடைப்பிற்கான காரணம் : 
இதைப் பற்றி பேசிய டாக்டர் தர்ம குமார் ”முதன்முறையாக மாரடைப்பிற்கு முன் ஏற்படும் இதய செயலிழப்பிற்கான மூல காரணத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் அதற்கான தீர்வுகளை கண்டறிய முயற்சி செய்து வருகிறோம். இதனை முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை மூலம் எவ்வாறு கண்டறிவது என்பதை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் தர்மகுமார் தன்னுடைய மருத்துவர் குழுவுடன் சேர்ந்து “அயர்ன் செலேஷன் தெரபி” என்ற முறையினைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்

ஆண்டிற்கு 18 மில்லி உயிரிழப்புக்கள் : 
ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 18 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இதய நோயினால் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. இதய நோய்களைப் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமையும், சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, பாதுகாப்பற்ற உணவுகள் ஆகியவற்றினாலும் இளம் வயதினரை இதய நோய் அதிகமாக தாக்குகிறது.

இதய செயலிழப்பு என்பது என்ன? 
ரத்தத்தை உடல் முழுவதும் கொண்டு சேர்க்கும் வேலையை செய்யும் இதயமானது, திடீரென்று தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திவிட்டால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதுவே இதய செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 50 சதவீத மக்கள் இந்த இதய செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய மாரடைப்பு அல்லது மையோகார்டியல் இன்ஃபெக்சன் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு அடுத்த ஐந்து வருடத்திற்குள் இதய செயலிழப்பு ஏற்படும் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறுகிறார். இந்த தலைமுறையில் அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு மூன்று லட்சம் பேர் இதய செயலிழப்பினால் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் தீர்வு? 
மருத்துவ காரணங்களை தவிர்த்து வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்க வழக்கங்களையும் சரியான நேரத்தில் தூங்குவது மற்றும் மது, புகையிலை ஆகியவற்றை தவிர்ப்பதன் மூலம் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியும். மேலும் உடலளவில் சுறுசுறுப்பாகவும், தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டு வருபவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
news18


 


Post a Comment

Previous Post Next Post