டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய நாளில் இருந்து அடுத்தடுத்து பல மாற்றங்கள் நடந்துள்ளது 5 க்கும் அதிகமான உயர்மட்ட அதிகாரிகள் வெளியேற்றத்தில் துவங்கி ஜெனர்ல் மோட்டார்ஸ், ஃபோர்டு ஆகியவை டிவிட்டரில் விளம்பரம் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தியது வரையில்..
இந்த நிலையில் எலான் மஸ்க் டிவிட்டர் தளத்தில் புதிதாக NFT-க்கான விற்பனை தளத்தை உருவாக்கி முடிவு செய்துள்ளார்.
எலான் மஸ்க் கிரிப்டோகரன்சி, NFT, பிளாக்செயின் மீது தீரா காதல் கொண்டு உள்ளார் என அனைவருக்கும் தெரியும். டெஸ்லா நிறுவனத்தில் கிரிப்டோ மூலம் கார், டி சர்ட் வரையில் விற்பனை செய்யத் தயாரான எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பின்பு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
X App கனவு திட்டம் இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தை வெறும் சமூகவலைத்தள நிறுவனமாக மட்டுமே இயக்காமல் உணவு டெலிவரி, பேமெண்ட் எனப் பல்வேறு சேவைகளைக் கொண்ட பெரிய டிஜிட்டல் தளமாக மாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு தனது கனவு மொபைல் செயலியான X App-ஐ டிவிட்டர் மூலம் சாதிக்கத் திட்டமிட்டு உள்ளார்.
NFT Tweet Tiles சேவை இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து 24 மணிநேரம் கூட முடியாத நிலையில் Tweet Tiles என்ற புதிய சேவையை அறிமுகம் செய்யச் சோதனை செய்ய உள்ளதாக டிவிட்டர் அறிவித்துள்ளது. Tweet Tiles சேவை எலான் மஸ்க் கொண்டு வந்ததா அல்லது டிவிட்டர் ஏற்கனவே பணியாற்றி இருந்த சேவையா என அறிவிக்கப்படவில்லை.
மார்கெட்பிளேஸ் Tweet Tiles என்பது NFT-க்கான ஒரு மார்கெட்பிளேஸ் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஈகாமர்ஸ் தளம் போன்றது. தற்போது டிவிட்டர் நிறுவனம் NFT Tweet Tiles என்னும் புதிய சேவையை டெஸ்டிங் செய்து வருகிறது.
புதிய சேவை
இந்த NFT Tweet Tiles-ல் விற்பனைக்கு வரும் NFT-யின் தலைப்பு, உருவாக்கியவரின் விபரம், புதிய டிஸ்பிளே பார்மெட் உடன் வர உள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
முதல் கட்டாமாக டிவிட்டர் தளத்தில் புதிதாகத் துவங்க உள்ள மார்கெட்பிளேஸ்-ல் NFT விற்பனை செய்ய Jump.trade, GuardianLink's NFT, கேமிங் NFT பிராண்டுகள், பல வெளிநாட்டு NFT B2C தளங்கள் தங்களின் NFT-ஐ டிவிட்டரில் பட்டியலிட்டு விற்பனை செய்யத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
காமேஸ்வரன் இளங்கோவன்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தொடர்ந்து டிவிட்டர் NFT-க்கான இன்டர்பேஸ் மற்றும் அனுபவத்தை அளிக்கிறது. இதைத் தொடர்ந்து சமுக வலைத்தள நிறுவனங்கள் NFT போன்ற புதிய தொழில்நுட்பத்திற்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கும் போது இதற்கான எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது எனக் கார்டியன் லிங்கில் இணை நிறுவனர் மற்றும் சிஓஓ காமேஸ்வரன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
NFT பிரிவு வளர்ச்சி மேலும் எலான் மஸ்க் NFT பிரிவில் டிவிட்டர் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து பல சர்ப்ரைஸ் அளிப்பார் என நம்பும் நிலையில், கிராண்ட் வியூவ் ரிசர்ச் சர்வதேச NFT மார்கெட் அளவு 2030க்குள் 211.72 பில்லியன் டாலராக 33.9 சதவீத CAGR வளர்ச்சி உடன் உயரும் எனத் தெரிவித்துள்ளது.
goodreturns
மேலும்..... இலங்கை செய்திகள்
மேலும்..... இந்தியா செய்திகள்
மேலும்..... உலக செய்திகள்
மேலும்..... விளையாட்டு செய்திகள்