Ticker

6/recent/ticker-posts

Ad Code



புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-140


கானகத்துக்குள்  பல்வேறு மொழிகளைப் பேசுவோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசுவது ஒலிவடிவ    மொழிகளே! வரிவடிவிலான எம்மொழியும் கானகத்துள் புழக்கத்திலுமில்லை; இவர்களுக்கு வறிவடிவமொழி உபயோகப்படப் போவதுமில்லை.   இங்கு தமிழ் அனைவருமே பேசக்கூடிய ஒரு பொதுமொழியாகவே  இருந்து வருகின்றது. 

இமய மலைக்கும், விந்திமலைக்கும் இடையிலுள்ள ஆரியவர்த்தம்  தேசத்திலிந்தே  இம்மொழி  இங்கு வந்திருக்கலாமென ஆதிக்குடியினர் நம்புகின்றனர்.
ஆனாலும் மொழிவந்த வழியினை ஆராய்வது அவர்களுக்குத் தேவையற்றவொன்றாகும்! 

இருந்தபோதிலும், செரோக்கியின் தந்தை இது பற்றிக் குறிப்பிடும்போது, ஆதிகாலத்து 'முனி' ஒருவர் விதர்ப்பநாட்டு அரசன் மகளை மணந்துள்ளார். கோபங்கொண்ட அரசன் அவர்களை கானகத்துக்குள் அனுப்பியபோது,  கானகத்துக்குள் அவர்கள் அங்குமிங்குமாக அலைந்து வாழ்ந்துவந்தபோது, தமது தாய்நாட்டில் பேசிவந்த  மொழியிலேயே இங்குள்ள மக்களுடன் சம்பாசித்து வந்துள்ளனர்.  அதுவே காலப்போக்கில் வனத்துக்குள்  வியாபித்து விட்டதாகச் செவிவழிச் செய்திகள் குறிப்பிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தீமூட்டுவிழாப் பண்டிகைக் கொண்டாட்டாக் களிப்பில் 'பெரியகல்' அல்லோல கல்லோலப் பட்டிருந்தது. 

பிரதம அதிதியான பெரியவரை அழைத்துவரச் சென்றிருந்த செரோக்கியுடன், பெரியவரும் வருவார்  என்று எதிர்பார்த்த வண்ணம்,  அனைவருமே கல்லடி நோக்கியிருந்தனர். வேரேணி மெல்ல அசையத் தொடங்கியது...! 
(தொடரும்) 



 


Post a Comment

0 Comments