2022-கத்தார் காற்பந்தாட்ட அரையிறுதிப் போட்டி, ஓர் அலசல்!

2022-கத்தார் காற்பந்தாட்ட அரையிறுதிப் போட்டி, ஓர் அலசல்!


22வது உலக கோப்பை காற்பந்துப் போட்டி கடந்த மாதம் 20ம் திகதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெற்று ஆட்டங்கள் நடந்தேறின.

ஆட்டங்களின் முடிவில் நெதர்லாந்து-செனகல், இங்கிலாந்து-அமெரிக்கா, அர்ஜென்டினா-போலந்து, பிரான்ஸ்-ஆஸ்திரேலியா, ஜப்பான்-ஸ்பெயின், மொராக்கோ-குரோஷியா, பிரேசில்-சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல்-தென் கொரியா ஆகிய 16 நாடுகள் நாக்கௌவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றுப் பின்னர்-நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியா, பிரேசில், மொரோக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்று அணிகள் மோதிக்கொண்டன.

அரையிறுதிக்குத் தெரிவான  அர்ஜென்டினா-குரோஷியா அணிகளும், பிரான்ஸ்-மொராக்கோ அணிகளும் முறையே திசம்பர் ,14-15களில் மோதுகின்றன.


இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகளே  இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

புதிதாகக் களத்திற்குள் நுழைந்துள்ள மொரோக்கோ அணியும், குரோஷியா அணியும் முன்னாள் சாம்பியன்களான ஆர்ஜென்டினா-பிரான்ஸ் ஆகிய அணிகளுக்குச் சவாலாக அமைந்துள்ள நிலையில்,  திசம்பர் 18ம் திகதி நிகழவிருக்கும் அதிர்ச்சி அளிக்கப்போகும்  இறுதிப்போட்டியைக் காற்பந்தாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அரையிறுதியில் மொரோக்கோ அணி  பிரான்ஸ் அணியை  வீழ்த்தினால்,  அது உலக வரலாற்றுச் சாதனையாக இருக்கும் அதேவவேளை காற்பந்தாட்ட விளையாட்டில் ஆபிரிக்க-ஆசிய நாடுகளுக்குப் புதிய உத்வேகத்தையும் அளிக்கும்!

இதுவரை  எட்டு நாடுகளே 21 உலகக் கிண்ணங்களை  வென்றுள்ளன:
பிரேசில் (Brazil)- (1958, 1962, 1970, 1994, 2002) 
இத்தாலி (Italy) - (1934, 1938, 1982, 2006)
ஜெர்மனி (Germany) - (1954, 1974, 1990, 2014)
உருகுவே (Uruguay) - (1930, 1950)
பிரான்ஸ் (France) - (1998, 2018)
அர்ஜென்ட்டினா (Argentina) - (1978, 1986) 
இங்கிலாந்து (England) - (1966)
ஸ்பெயின் (Spain) - (2010) 
இம்முறை கத்தார்-2022ல், 22வது உலகக்கிண்ணத்தை வெல்லும் அணியாக "மொராக்கோ" இருக்குமா என்பதை விளையாட்டுப் பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்!

ஆர்ஜெண்டினா-குரோஷியா போட்டி முடிவில் "குரோஷியா" வெற்றி பெற்றாலும், பிரான்ஸ்-மொரோக்கோ போட்டி முடிவில் "பிரான்ஸ்" தோல்வியடைந்தாலும், உலக சாம்பியனாகும் ஒன்பதாவது நாடு குரேஷியாவா, மொரோக்கோவா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

ஆர்ஜெண்டினா இறுதிப் போட்டிக்கு வந்தால் மொரோக்கோ உலகக்கிண்ணத்தை  வெல்லும் ஒன்பதாவது தேசமாகும்  வாய்ப்பு அதிகமாகவே உள்ளதாக  விளையாட்டு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்!

-செம்மைத்துளியான்


 


Post a Comment

Previous Post Next Post