Ticker

6/recent/ticker-posts

Ad Code



ராஜகுமாரியின் சுயம்வரம்-4

(என்று பாட்டி சொல்லி முடித்ததும்.)
தேவி சித்தி கேட்டாள்.
 ஏன் பாட்டி அப்படி என்ன ரகசியமாக இருக்கும். பாட்டி சொன்னாள் எனக்கும் தெரியாதே. என்று செல்லி விட்டு பொன்முறுவல் பூத்தார். உடனே தேவி சித்தி சொன்னாங்க .ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லை பாட்டி. அவளுக்கு பொறாமை. மகனுக்கு கட்டிக் கொடுக்க முடியாமல் போனதில் வயிறு எரிகிறது . என தேவி சித்தி சொல்லி முடிக்க. எல்லோரும் சேர்ந்து ஆமா ஆமா என்றார்கள்.  பாட்டி சிரித்துக் கொண்டே சொன்னார் சரி என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே. எனக் கூறி கதையை தொடர்ந்தார்) 

இனி என்ன இரண்டு நாட்டிலும் சிறப்பான ஏற்பாடு  கோலாகலம் கொண்டாட்டத்துடன் மாப்பிளை அழைப்பு என பல நாட்டு அரசர் பல நாட்டுக் கோயில் குருக்கள் முக்கிய புலவர்கள்  நாட்டு மக்கள் எல்லோர் முன்நிலையிலும் தாலி கட்டும் சடங்கு நிறைவு பெற்று. விருந்தோம்பல் அமைதியான முறையிலும் அறுசுவை உணவாகம் பகிர்ந்து இனிதே நிறைவு பெற்றது .ராஜகுமாரியின் சுயம்வரம். 

சிறப்பில் பங்கு எடுத்த அனைவரும் .அரசர் அரசியிடம் வாழ்த்து உரைத்து விட்டு விடை பெற்றனர் .பூங்குழலி ராணி மாத்திரம் தனக்குப் பதிலாக தன் படைத்தலைவனை அனுப்பி இருந்தாள்.

தோழிகள் அனைவரும் புதுப் பெண்ணை அலங்கரித்து  மணமகன் அறையில் கொண்டு விட்டு கதவினைத்
 தாழ் இட்டனர்.

புன்னகையோடு தனது புது மனைவியை அமர்த்தி விட்டு .அழகாய் உரையாடினான் தான் அண்ணியாக நினைக்க வேண்டிய இடத்தை இறைவன் உங்களுக்கு கொடுக்க வில்லை. என் உயிராய் நினைக்கும் பாக்கியத்தைக் கொடுத்து இருக்கின்றான் .நிச்சயமாக நாம் . அன்பான தம்பதியர்களாய் வாழ்வோம். என்று வாக்குறுதி கொடுத்து விட்டு. சற்று நேரம் சில குறிப்புக்கள் குறித்து விட்டு வருவதாகக் கூறி எழுதுகோல் எடுத்து ஏதோ கிறுக்கிக் கொண்டு இருக்க. மணப் பெண்ணான ராஜகுமாரி . சாய்ந்து கொண்டே உறங்கி விட்டாள் . சட்டன திரும்பி பார்த்தவன் தனக்குள்ளே தன் மனைவி உறங்கிடும் அழகிக்கு பல கவிகள் படித்து விட்டு. முகம் அலம்பிக் கொண்டு வந்து உறங்க .அறைக்குள் வந்தவனுக்கு காத்திருந்த ஓர் அதிர்ச்சி .

அது பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது. அந்த அதிர்வே அவன் உயிரைப் பறித்து விட்டது  என்றாள் பாட்டி.

(கதை கேட்டுக் கொண்டு இருந்த எல்லோரும் அய்யய்யோ என்றார்கள் 
ஒரே கோசத்தில்  அது வரை மௌனமாக இருந்த தேவி அக்காவின் மாமியார் சொன்னார் மூதேவி செவ்வாய் தோசமோ இரண்டு உயிரை பறித்து விட்டாளே எனக் கடுப்போடு சொல்லி முடித்தார்  என்னவாக இருக்கும் என்னவாக இருக்கும் என்று எல்லோரும் கசுபுசுத்தார்கள் .

உடனே பாட்டி கூறினார் சரி மீதிக் கதை நாளை கூறுகின்றேன்.

எந்த இடத்தோடு நிறுத்தினேன்.என்று ஞாபகம் வைத்திருங்கள் பாடசாலை போகின்றவர்கள் எல்லோருமே போய்த் தூங்குங்க. என்றார் யாருக்கும் கதை முடியாமல் அந்த இடத்தை விட்டு போகப் பிடிக்வில்லை. வேறு வழி இல்லை பாட்டி முடிவு எடுத்தால் எடுத்தது தான்.

மனதில் கேள்வியோடு எழுந்து சென்றார்கள். தூக்கம் தான் கண்ணில் வரவில்லை விடை அறியாதமையால். எல்லோர் கண்களிலும் 
பாட்டி மட்டும் குறட்டை பிடித்தாள்) 
(தொடரும்)
கலா


 


Post a Comment

0 Comments