Ticker

6/recent/ticker-posts

Ad Code

நலம் வாழ -மருத்துவப் பகுதி -5

அன்பார்ந்த வாசகர்களே நமது நோக்கம் இப்பூவுலகில் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்பதே ....இன்று நலம் என்பதில் நாம் உண்ணுகின்ற உணவும் அடங்கும்.  முதல் தேவை உணவாகத்தான் இருந்தது.அந்த தேவை தான் ,அந்தத் தேடல்தான் உழைக்கத் தூண்டியது.

அவனுடைய பசியை போக்க பழங்கள், மாமிசம் போன்றவற்றை புசிக்க ஆரம்பித்து பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன்,தேடிப் பெறுவதையும் வேட்டையாடுவதையும் தவிர்த்து உணவை அறுவடை செய்ய ஆரம்பித்தான். மாமிசத்திற்காக விலங்கினங்களை வளர்க்கவும் ஆரம்பித்தான். இவ்வாறாக மனிதனுடைய உணவு தேவை பல்கிப் பெருகி விஞ்ஞான வளர்ச்சியில் இன்று பாலைவனத்திலும் கப்பல்களிலும் கூட விவசாயம் செய்யும் நிலையில் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னோடியாக 
படிப்படியாக  முன்னேற்றம் அடைந்து  நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியிலும் கூட இப்பொழுது இந்த சூழ்நிலையில் நாம் நினைத்து ஆசைப்பட்ட உணவை உண்ண முடிகிறதா என்றால் கேள்வி குறிதான் மிஞ்சும்?????.

ஏனெனில் மனித சமுதாயத்தில் நலம் என்ற ஒன்று குறைந்தது தான் ஏனெனில் பத்தாண்டுகளுக்கு முன்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கேயோ ஓரிடத்தில் புற்றுநோய் ,சர்க்கரை நோய் என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இன்று ஒவ்வொரு ஊரிலும் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை பிரிவுகள் ஆங்காங்கே தோன்றி விட்டது..ஏன் இந்த மாற்றம்?

இதற்குப் பல காரணங்களை நாம் கூறினாலும்,உணவில் ஒரு ஒழுங்கு முறை இல்லாததும் ஒரு காரணம், உணவை தேர்ந்தெடுத்து உண்ணாதது தான் காரணம். நாம் நமது இரைப்பையில் போடுகின்ற உணவுதான் நம் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் 60% முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் நீங்கள் உண்ணும் உணவு மாத்திரமே நீங்களாக இருக்கிறீர்கள் .

சரி எவ்வாறு உணவை தேர்ந்தெடுப்பது?
சென்ற வார தொடர்ச்சியில் நாம் உணவை மூன்று வகைகளாக பிரித்து இருந்தோம்.உடலுக்கு வளர்ச்சி அளிப்பவை உடலுக்கு சக்தி அளிப்பவை உடலை பாதுகாப்பவை என்று.

உடலுக்கு சக்தியை அளிக்கும் பொருள் தான் உணவு என்கிறோம்.  புரதம் கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, தாது, உப்புக்கள், வைட்டமின்கள் ,நீர் ஆகிய பொருட்களை சரியான விகிதத்தில் கலந்து உண்ணும் உணவே சரிவிகித உணவு என்கிறோம். 

உணவின் ஊட்டப்பொருட்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் 

ஒன்று வேதியல் அடிப்படையில்,
 இரண்டாவது செயல் அடிப்படையில். 

வேதியியல் அடிப்படையில்......
 மேலே குறிப்பிட்ட படி கார்போஹைட்ரேட், புரோட்டின் ,விட்டமின், மினரல்ஸ்என்று  நாம் பிரிக்கலாம்.
செயல் அடிப்படையில்....
1. உடலுக்கு வளர்ச்சி அளிப்பவை(Body Building )
2.சக்தி அளிப்பவை(Energy producers)
3.ஒழுங்குபடுத்துபவை 
பாதுகாப்பவை (Regulators) .என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். 

முதலில் உடலுக்கு வளர்ச்சி அளிக்கும் உணவுகளை பார்ப்போம் புரதங்கள்(proteins)தாது உப்புக்கள் (minerals)
நீர் (water)இவை உடலுக்கு வளர்ச்சியை தருகின்றன அதனால் தான் குழந்தைகளுக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவுகளை பரிந்துரை செய்கின்றோம்.

இரண்டாவது சக்தி அளிப்பவை எனர்ஜி ப்ரொடியூசர்ஸ் நாம் அதிகமாக கலோரி என்ற வார்த்தையை கேட்டிருப்போம். கலோரி என்பது நாம் உண்ணும் உணவுப் பொருளிலிருந்து வெளிப்படும் வெப்ப சக்தியை கலோரி என்று அழைக்கிறோம்.

அதாவது ஒரு மில்லி லிட்டர் நீரின் வெப்பநிலையை ஒரு செல்சியஸ் உயர்த்த தேவையான வெப்பத்தை கலோரி என்று குறிக்கிறோம். 

இதில் கார்போஹைட்ரேட்கள் முதல் நிலை சக்தி அளிக்கும் பொருட்களாகும் 

இரண்டாம் நிலை சக்தி அளிக்கும் பொருள் கொழுப்புகளும் புரதங்களும்.
 இதை பற்றி பின்வரும் தொடரில் நாம் விரிவாக பார்க்கலாம்.
மூன்றாவதாக உடலை ஒழுங்குபடுத்துபவை.

உடலில் செயல்கள் ஒழுங்காக நடைபெறுவதற்கு தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவே இவை உடலை ஒழுங்குபடுத்துபவை என்று அழைக்கிறோம். இவ்வாறு நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் ஒவ்வொருவகையாக பிரிக்கப்பட்டு உடலுக்கு செயல்களை ஒழுங்கு படுத்தவும் பாதுகாக்கவும் வளர்ச்சிதை மாற்றத்தை உண்டு படுத்தவும் செய்கின்றன. இனி வரும் தொடர்களில் இதைப் பற்றி நாம் விரிவாக பார்க்கலாம் இத்துடன் இந்த தொடரின் முடிவுக்கு வந்து விட்டோம் 


அடுத்த வாரம் என்னென்ன உணவுகள் ,உடலுக்கு வளர்ச்சி தருபவை கார்போஹைட்ரேட் என்றால் என்ன? புரதம் என்றால் என்ன? என்பதை பற்றி எல்லாம் விரிவாக காணலாம் 
(தொடரும்)
 டாக்டர் ஃபர்ஜானா பாத்திமா M.D(Acu)..

தொகுப்பு :
உங்கள் குறள் யோகி, 
தமிழ்ச் செம்மல், 
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.


 


Post a Comment

0 Comments