Ticker

6/recent/ticker-posts

Ad Code

295 ரன்ஸ்.. ஆஸியை பும்ரா தலைமையில் ஓடவிட்டு கரியை பூசிய இந்தியா.. ஆப்டஸில் உலக சாதனை வெற்றி


ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடிய 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. பெர்த் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்த 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பந்து வீசிய இந்தியா 104க்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 5, ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதை அடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமாக பேட்டிங் செய்து 487-6 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் சதமடித்து 161 ரன்களும் அவருடன் சேர்ந்து 21 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 77 ரன்களும் குவித்தார்கள். அவர்களுடன் மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 100* ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நேதன் லயன் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியில் 534 என்ற மெகா இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு மெக்ஸ்வீனி 0, லபுஸ்ஷேன் 3 ரன்களில் பும்ரா வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். அதே போல உஸ்மான் கவாஜா 4, கேப்டன் கம்மின்ஸ் 2, ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டானார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் டிராவிஸ் ஹெட் – மிட்சேல் மார்ஷ் ஜோடி சேர்ந்து தோல்வியை தவிர்க்க போராடினார்கள்.

அதில் டிராவிஸ் ஹெட் வழக்கம் போல அரை சதமடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்த போது 89 ரன்களில் பும்ரா அவுட்டாக்கினார். மிட்சேல் மார்ஷ் 47 ரன்களில் நிதிஷ் ரெட்டி வேகத்தில் அவுட்டானார். இறுதியில் அலெக்ஸ் கேரி 36 ரன்கள் எடுத்தும் ஆஸ்திரேலியாவை 238 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 3, சிராஜ் 3, சுந்தர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் வாயிலாக பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன் இங்கே விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளிலும் வென்ற ஆஸ்திரேலியா தற்போது முதல் முறையாக இந்தியாவிடம் தோற்றுள்ளது.

சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா தோற்றது. அதனால் இத்தொடரில் கண்டிப்பாக இந்தியா தோற்கும் என்று ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கணித்தனர். ஆனால் ரோகித் சர்மா இல்லாமலேயே பும்ரா தலைமையில் அபாரமாக விளையாடி முதல் போட்டியிலேயே வென்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்று அவர்களின் முகத்தில் கரியை பூசி உள்ளது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments